| 
         
          | 3381. | மாலா 
            யவனும் மறைவல்ல நான்மு கனும் |   
          |  | பாலாய 
            தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக் காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
 ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.        10
 |  
       
         
          | 3382. | அற்றன்றி 
            யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும் |   
          |  | தெற்றென்று 
            தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில்
 பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.     11
 |  
  அம்மூர்த்தி முசுகுந்த 
        சக்கரவர்த்திமூலம் திருவாரூரில் எழுந்தருளினரென்பதும் வரலாறு.
       10. 
        பொ-ரை: திருமாலும், நான்மறைகளையும் நன்கு கற்ற பிரமனும், பலராகிய தேவர்களும் சொல்வதற்கரிய அமுதுண்ண விரும்பி, பாற்கடலைக்
 கடைய அரிதாய் எழுந்த ஆலகால விடத்தை உண்டு, தேவர்களைக் காத்து
 அருள்செய்தவர் சிவபெருமான்.
       கு-ரை: 
        மாலாயவனும்...செய்ததாமே என்றது:- திருமால் முதலிய தேவர்கள் இறந்தொழியாமைப் பொருட்டு இறைவன் நஞ்சுண்டு காத்த
 கருணைத்திறம் கூறியபடி.
       11. 
        பொ-ரை: சிவபெருமான் முன்னர்க்கூறிய புகழுரைகட்கு மட்டுமன்றி, மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தருளியவர்.
 சிவபெருமானே முழுமுதற்பொருள் எனத் தெளிவு பெறாதவர்கள்
 தெளிவுபெறும் பொருட்டு வாதத்தில் உண்மைகாண ஞானசம்பந்தர் இட்ட
 ஏடு பற்றற்ற சிவஞானிகளின் மனம் பிறவியாற்றை எதிர்த்துச் செல்வது போல,
 வையையாற்றை எதிர்த்துச் சென்ற தன்மையை நோக்கில், இடபவாகனத்தின்
 மீதேறிய சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பது உண்மையாகும்.
 ஆதலால் அவர்பால் அன்பு செய்தல் கடன் என்பது குறிப்பு. ஞானசம்பந்தர்
 சமணர்களோடு புனல்வாதம் செய்ததற்கும், அப்போது அவரிட்ட ஏடு
 வையையாற்றை எதிர்த்துச் சென்ற அற்புத நிகழ்ச்சிக்கும் இப்பாடலே
 அகச்சான்றாகும்.
       கு-ரை: 
        அற்றன்றி... அன்றே என்றது:- மதுரையிற் சங்கம்  |