பக்கம் எண் :

828திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3478. கூரார லிரைதேர்ந்து குளமுலவி
       வயல்வாழும்
தாராவே மடநாராய் தமியேற்கொன்
     றுரையீரே
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்
     குடிமேய
பேராளன் பெருமான்ற னருளொருநாட்
     பெறலாமே.                         8


திறத்தவர்களே அவன் திருவருளைப் பெறலாமோ? ஓர் அடியாள்
அவருடைய திருவருளைக் கெஞ்சி வேண்டினாள் என்று ஒரு நாளாவது
சென்று அவரிடம் உரைப்பீராக!

     கு-ரை: கரு அடிய - கரிய பாதத்தை உடைய. (பசுங் காலைக்
கொண்ட) ஒண் - அழகிய, கழி - கழியில் உள்ள, கரு + அடிய. ‘காரடிய’
ஒரு அடியாள். ஒருஅடியாள் இரந்தாள் - கெஞ்சி வேண்டிக் கொண்டாள்.
என்று ஒருநாள் - ஒரு நாளைக்கேனும். சென்று - போய். உரையீர் -
சொல்வீர். செரு - போரில், வடித்ததோள், சிறுத்தொண்டன் -
சிறுத்தொண்டரது (செங்காட்டங்குடி) மேய - மேவிய. திரு அடிதன்
திருவருளே திறத்தவர்க்கு - அவன் வழிச்செல்பவர்கட்கு.

     8. பொ-ரை: கூர்மையான அலகால் இரையைக் கொத்திக்
குளங்களிலும், வயல்களிலும் வாழ்கின்ற தாரா என்ற பறவையே! மட
நாரையே! என் பொருட்டுச் சிவபெருமானிடம் சென்று ஒரு செய்தியை
சொல்வீரோ? சிறந்த புகழுடைய சிறுத்தொண்டர் வழிபடுகின்ற
திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற கீர்த்தியுடைய
சிவபெருமான் திருவருளை ஒருநாள் அடியேன் பெறுதல் இயலுமா?

     கு-ரை: கூர்ஆரல் - மிக்க ஆரல் என்னும் மீனாகிய இரையை
தமியேற்கு - ஒன்றியாகிய எனக்கு; என்றமையால் (துணை பிரியாத)
தாராவே, மடநாராய் என்பது பெறப்படும்.

     ஒன்று - (ஆற்றி யிருக்கத்தக்க) ஒருவழி, தமியேற்கு - தமியேன்
பொருட்டு. ஒன்று - ஒரு தூது மொழியை. (உரைப்பீர் ஆக) பேராளன்
- கீர்த்தியை யுடையவன்.