| 
         
          |  | வண்டாருங் 
            குழலாளை வரையாகத் தொருபாகம்
 கண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக்
 காட்டாரே                      10
 |  
         
          | 3502. | கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் |   
          |  | காட்டுறையும் பெண்ணாருந் திருமேனிப் பெருமான
 தடிவாழ்த்தித்
 தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான
 சம்பந்தன்
 பண்ணாருந் தமிழ்வல்லார் பரலோகத்
 திருப்பாரே.                     11
 |   
        திருச்சிற்றம்பலம்
       
       கு-ரை: 
        குண்டாடி - விதண்டை பேசி. சமண்படுவார் - (நல்லூழ் இன்மையின்) சமணசமயமுற்றவரும். கூறைதனை - ஆடையை. மிண்டு
 ஆடி - வலிய உரைகளைப் பேசித் திரிவாராகிய புத்தரும். உரைப்பனகள்
 - சொல்லுவன. (மெய்யல்ல) அவற்றை விடுத்து, சார்புணர்ந்து சாரத்தக்கவர்
 யார் எனின், அவர் வண்டு ஆரும் குழலாளை மலைபோன்ற உடம்பில்
 ஒரு பாகம் வைத்துக்கொண்டு பொருந்தும் கச்சிநெறிக்காரைக்காட்டார்
 ஆவர் என்க. உரைப்பனவற்றிலும் பலவகைகள் என்பதை உரைப்பனகள்
 என விகுதிமேல் விகுதி தந்து விளக்கினார். பிழைத்தனகள் அத்தனையும்
 பொறுத்தா யன்றே என இவ்வாறே அப்பர்பெருமானும் அருளினமை
 காண்க.
       11. 
        பொ-ரை:கண்ணுக்கு இனிமை தரும் ஒலிமிக்க திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும், தன் திருமேனியின் ஒரு
 பாகமாக உமாதேவியை வைத்த சிவபெருமான் திருவடிகளை வாழ்த்தி,
 குளிர்ச்சி பொருந்திய அழகிய சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த
 தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இத்தமிழ்த்
 திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் இறைவனுலகில் இருப்பதாகிய சாலோக
 பதவியை அடைவர்.
       கு-ரை: 
        கண் ஆரும் - கண்ணுக்கினிமை நிறைந்த. (கலிக்கச்சி நெறிக் காரைக்காடு)
 |