3557. |
மிண்டுதிற லமணரொடு சாக்கியரு |
|
மலர்தூற்ற
மிக்கதிறலோன்
இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெரு
மானதிட மென்பரெழிலார்
தெண்டிரை பரந்தொழுகு காவிரிய
தென்கரை நிரந்துகமழ்பூ
வண்டவை திளைக்கமது வந்தொழுகு
சோலைமயி லாடுதுறையே. 10 |
கு-ரை:
ஒண்திறலின் - மிக்க வலிமையுடைய. நான்முகனும், மாலும்,
மிகநேடி - மிகவும்தேடி, உணராத வகையால் - அவர்கள் அறியாத
வண்ணம், அண்டமுற - ஆகாயமளயும், அங்கி உருவாகி - நெருப்பின்
வடிவாகி, (மிக நீண்ட) அரனாரது இடமாம் - சிவபெருமானது இடமாகும்.
மடநாரை - இளம் நாரைகள். கொண்டை இரை கொண்டு - கொண்டை
மீனை இரையாக உண்டு, கெளிறு ஆர் உடன் இருந்து - கெளிற்று
மீன்களோடும் ஆரல் மீனக்ளோடும் இருந்து, கிளர் - விளங்குகின்ற, வாய்
- கரையினிடத்தில், அருதல்சேர் - தண்ணீர் அறுத்தலால் உண்டாகிய.
வண்டல் மணல் - வண்டல் மணலை. கெண்டி - கிளறி - விளையாடும்
மயிலாடுதுறை வாய் - ஆற்றோரம் காவிரியதன் வாய்க்கரை என்ற
சுந்தரமூர்த்திகள் தேவாரத்தாலும் அறிக. (நமச்சிவாயத் திருப்பதிகம்)
ஆற்றோரம்) ஆள்றோரம் தண்ணீரறுக்காமல் கட்டப்படும் அணையை -
வாய்க்கணை, வாய்கணை. வாகணை என வழங்குப.
10.
பொ-ரை: துடுக்காகப் பேசுகின்ற சமணர்களும், புத்தர்களும்
பழித்துக்கூற, அவர்கள் அறிவிற்கு அப்பாற்பட்ட ஆற்றலுடையவனும்,
இண்டைமாலை சூடிய சடைமுடி உடையவனுமான எங்கள் சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது, தெள்ளிய அலைகள் உடன் பாயும்
காவிரியாற்றின் தென்கரையில் மணமிக்க பூக்களில் வண்டுகள் மூழ்கியுண்ண,
தேன் வெளிப்பட்டு ஒழுகுகின்ற சோலைகளையுடைய அழகிய
திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
மிண்டுதிறல் - ஏமாற்றுகின்ற வலிமை மிக்க, (அமணர் ஒடு)
சாக்கியரும் புத்தரும். அலர்தூற்ற - பலரும் அறியும்படி, பழிக்க. மிக்க
திறலோன் - அவர் அறிவுக்கு மேற்பட்ட (எட்டாத) வலிமையுடையோன்,
இண்டைய குடிகொண்ட - இண்டை மாலை குடி கொண்ட (சடையையுடைய
எங்கள் பெருமான் அது இடம் ) தெண் திரை பரந்து ஒழுகு - தெள்ளிய
அலைகள் பரவி ஒடிவருகின்ற.
|