பக்கம் எண் :

920திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3582. நீரின்மலி புன்சடையர் நீளரவு
       கச்சையது நச்சிலையதோர்
கூரின்மலி சூலமது வேந்தியுடை
     கோவணமு மானினுரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள்
     காதல்செய்து மேயநகர்தான்
பாரின்மலி சீர்பழைசை பட்டிசர
     மேத்தவினை பற்றழியுமே.         2


     கு-ரை: பாடல் மறை - பாடுவது வேதம். சூடல்மதி - சூடுவது
சந்திரன். ஓர்பாகம் - ஓர்பாகத்தில் (அமர்ந்திருப்பவர்). பல்வளை - பல
வளையல்களை அணிந்த உமாதேவியார். மதில் மூன்று - திரிபுரங்களையும்.
ஓர் கணையால் - ஓர் அம்பினால். கூட எரியூட்டி - ஒருசேர நெருப்பை
உண்ணச்செய்து. எழில்காட்டி - தனது வீரத்தின் அழகைக்காட்டி. (சிரித்துப்
புரம் எரித்ததை) நிழல் கூட்டு பொழில் - நிழலைத் தரும் சோலை சூழ்ந்த.
பழசையுள் - திருப்பழையாறையில். மாடம் மழபாடி - மாடங்களையுடைய
மழபாடியென்னும் பகுகதியில். உறை - தங்குகின்ற. பட்டிசரம் மேய -
திருப்பட்டீச்சரத்தில் எழுந்தருளியுள்ள. கடிகட்டு அரவினார் - அரையில்
கட்டிய பாம்பையுடையவர். வேடநிலைகொண்டவரை - தமது வேடத்திற்
கேற்ப ஒழுக்கத்தின் நிற்றலையுடைய அடியவரை. வீடுநெறிகாட்டி -
அடைதற்குரிய முத்தி மார்க்கத்தையும் அறிவித்து. வினை வீடும் அவர் -
அவர்களது கன்மங்கள் தாமே யொழியும்படி செய்ய வல்லவராவர்.
பட்டீச்சரம் மே(வி)ய அரவினார் வினை வீடுமவராவர் என்க. பழையாறை -
பெரிய நகரமாயிருந்த இடம். இப்பொழுது அதன் ஒவ்வொரு பகுதியும்
வெவ்வேறு பெயர்களால் வழங்குகின்றது. பட்டீச்சரம் என இன்று வழங்குவர்.
சம்பந்தப் பெருமான் காலத்தில் இவ்வூர் மழபாடியென வழங்கப்பட்டது.
மழ நாட்டில் கொள்ளிட நதியின் வடகரையிலுள்ள மழபாடி என்னும் தலம்
வேறு. கடி - இடக்கரடக்கல்.

     2. பொ-ரை: சிவபெருமான் கங்கையைச் சடையில் தாங்கியவர். நீண்ட
பாம்பைக் கச்சாகக் கட்டியவர். கூர்மையான இலைபோன்ற வடிவுடைய
கொடிய சூலப்படையை ஏந்தியவர். கோவண ஆடை அணிந்தவர். மான்
தோலையும் அணிந்தவர். கார்காலத்தில் மலரும் கொன்றையை மாலையாக
அணிந்தவர். அத்தகைய கடவுள் விரும்பி