| 
       
         
          |  | சிந்தைசெய 
            வல்லவர்க ணல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
 அந்தவுல கெய்தியர சாளுமது
 வேசரத மாணைநமதே.                11
 |   திருச்சிற்றம்பலம் 
  சம்பந்தன் பொருட்செறிவுடைய 
        செந்தமிழில் அருளிய இப்பாமாலை கொண்டு திருவேதிகுடியில் வீற்றிருந்தருளும் முதல்வனான சிவபெருமானின்
 திருவடிகளைச் சிந்தித்துப் போற்றுபவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வர்.
 மறுமையில் தேவலோகத்தை அடைந்து அரசாள்வர். இது நமது ஆணை.
      கு-ரை: 
        கந்தம் மலி - வாசனைமிகுந்த. தண்பொழில் - குளிர்ச்சி பொருந்திய சோலைகளும். நல் மாடம் - அழகிய மாடங்களும். மிடை -
 நெருங்கிய (காழி,) மலி - பொருட்செறிவையுடைய (செந்தமிழ்.) ஆதி -
 முதல்வன். சரதம் - நிச்சயம்.
 
        
          | திருஞானசம்பந்தர் 
              புராணம் வேத வேதியர் 
              வேதி குடியினில்நாதர் கோயில் அணைந்து நலந்திகழ்
 பாத பங்கயம் போற்றிப் பணிந்தெழுந்
 தோதி னார்தமிழ் வேதத்தின் ஓங்கிசை.
 - 
              சேக்கிழார்.
 |  |