| 1072.                                                               | அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர் சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
 கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
 பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.
 |  | 
                      | 2 | 
                      | 
 | 
                      | (சிந்தா             - 2136) "பொன்னப்பத்தம் என னகர ஈறு அக்குப் பெற்றது" "பொன்னங்கட்டி"             என அம்முப்பெற்றது (தொல்.எழுத்து.நச்.சூத்.405). என் அன்பு எனப் பிரிக்க. அன்பு             என்பது அம்பு என மருவிற்று. தென்பு - தெம்பு. வன்பு - வம்பு. (வீண்பு - வீம்பு.)             காண்பு - காம்பு. பாண்பு - பாம்பு முதலிய சொற்களால் வல்லெழுத்துக்கேற்ப மெல்லெழுத்துத்             திரிதல் காண்க. என் நம்பு எனப் பிரித்து என் விருப்பம் எனலுமாம். 'நம்பும்             மேவும் நசையாகும்மே' (தொல்காப்பியம் சொல். 329.) ஆலித்தல்             - விரித்தல், பெருக்கல், களித்தல், நிறைதல் "ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற             சிற்றம்பலம்" (தி.9 திருப்பல்லாண்டு) அகலல் என்பதன் மருவாகிய ஆலல் என்னும்             தொழிற்பெயர் வேறு; ஆலித்தல் என்னும் தொழிற்பெயர் வேறு. "அரனுக்கு அன்பர்             ஆலின சிந்தைபோல அலர்ந்தன கதிர் களெல்லாம்" (தி.12.திருநாட்.21.) "ஆலிய             முகிலின் கூட்டம்" (தி. 12 திருநாட். 24.) என்னம் எனக் கொண்டு எத்தன்மையனவும்             என்றுரைத்தலும் பொருந்தும். 'இன்னம்............பிறவியே' 'மனித்தப் பிறவியும்             வேண்டுவதே இந்தமாநிலத்தே' என்றார் முன்னும். (தி.4.ப.8.பா.4) உரை காண்க.             பாலித்தல் - கொடுத்தருளல். | 
                      | எல்லோரும் பிறவாமையை வேண்டுதலாயிருக்க சுவாமிகள் திருக்கூத்தைக் காணும் பிறவியையே             வேண்டினார். அக்காட்சிகண்ட அளவானே, இவ்வுடம்பு உள்ளபோதே, பரமுத்திப் பேரானந்த             அதீத நிலையை எய்தித் திளைக்கவைத்தலின். | 
                      | தில்லைத் தரிசனம் பரமுத்தியானந்தத்தை இவ்வுடம்பு உள்ள போதே கொடுத்தலின்,             அத்தரிசனத்திற்கு வாயிலாகிய பிறவியை மேலும் வேண்டுவாராயினர். | 
                      | 2. பொ-ரை: அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள்             நீக்கமுறத்தூவி, கரும்பாகிய வில்லை ஏந்திய கருவேளை எரித்தவனாகிய பெரும்பற்றப்புலியூர்             எம்பிரானை நீர் தொழுமின். | 
                      | கு-ரை: வழிபாட்டுக்கு மலர் எடுக்குங்கால் அரும்புகளை நீக்கி |