பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)1.கோயில்255

1076.
சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
சிட்டர் பாலணு கான்செறு காலனே.

6

1077.
ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்
திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்
விருத்த னாரிளை யார்விட முண்டவெம்
அருத்த னாரடி யாரை யறிவரே.

7


     6. பொ-ரை: ஞானிகளும் தேவர்களும் போய்வேண்டும் வரங்களைப் பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது தில்லைச் சிற்றம்பலம்; சிட்டர்களாகிய அந்தணர்கள் வாழ்தற்கு இடமாவது அது. அத்தில்லைச் சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடியருளும் ஞானமூர்த்தியின் திருவடிகளைக் கைகூப்பித் தொழப்போகும் அச்சிட்டர்களாய மெய்ஞ்ஞானியரையே, ஏனையோரைச் செறுதற்கு வல்லகாலன் அணுக மாட்டான்.
     கு-ரை:சிட்டர் - அறிவர்; ஞானியர்; தில்லைவாழந்தணர். சிட்டன் - ஞானமூர்த்தியாகிய நடராசப்பெருமான். சிட்டன், சிரேஷ்டன், சிஷ்டாசாரமுடையவன் என்பருமான் உளர்.
     7.பொ-ரை: தனிமுதற்பொருள் உலகங்களுக்கெல்லாம் ஒரே விளக்காய் உள்ளவர்; செம்மையார்; தில்லைச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடுபவர்; முதியார்; இளையார்; நஞ்சுண்ட எம்செல்வர்; அடியாரை அறிவார்.
     கு-ரை: ஒருத்தனார் - ஏகன் அநேகன் இறைவன் (தி.1.ப.5.) உலகங்கட்கு ஒரு சுடர் - 'சுடர்விட்டுளன் எங்கள் சோதி' (தி.3.ப.54.பா.5) 'சோதியே சுடரே சூழொளி விளக்கே' (தி.8 திருவாச.அருட்.1) 'சுடர்ச் சோதியுட் சோதியான்' (சம்பந்) 'தூயநற் சோதியுட் சோதி' (தி.9 திருவிசைப்.2.) 'உலக உயிர்க்கெல்லாம் ஒருகண்ணே' (இருபா.20). திருத்தம் -செம்மை. திருத்தன் - செம்பொருள். திருப்தி உடையவன் என்றலும் ஆம். திருப்தி எண்குணங்களில் ஒன்று. தீர்த்தனுமாம். உயிர்களைத் திருத்தி யாட்கொண்டவன் என்றலுமொன்று. 'திருத்தித் திருத்தி வந்தென் சிந்தையிடங்கொள் கயிலாயா' (தி.7.ப.47.பா.8.) விருத்தனார் இளையார் -