| 56 | ஐந்தாம் திருமுறையின் உரைச்சிறப்பு | (ஐந்தாம் திருமுறை) | |
| | என்பதற்கு, (தி.5.ப.11.பா.3) "ஓம் ஹொம் ஈசான மூர்த்தாய நம; என்பது முதலிய ஐந்து மந்திரங்கள்' எனச் சிவாகமங்களுள் இன்றியமையாதனவாக எடுத்தோதப்பட்ட வழிநிலை மந்திரங்களை மட்டும் குறித்துப் போகாது, 'ஈசானஸ் ஸர்வ வித்யாநான் எனத் தொடங்கும் ஐந்து மந்திரங்கள்' என வேத மந்திரங்களாகிய மூல மந்திரங்களையே குறித்தது பெரிதும் போற்றியுணர்தற்குரியது. இது வேதத்தின் தெளிவே சிவாகமம் என்பது உணராது சிவாகமங்களை விலக்கியொழுகுவார்க்குச் சிறந்ததோர் அறிவுரையாகற்பாலதாம். | | "அரிய நான்மறை ஆறங்க மாய்ஐந்து புரியன்" என்பதில், 'ஐந்து புரியன்' என்பதற்கு, (தி.5.ப.18.பா.7) ஐந்து பூதத் தலத்தில் உள்ளவன், ஐந்து தொழில் புரிபவன் என்றாற்போலப் பொருள் கூறாது, 'அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் என்னும் ஐங்கோசங்களாக எண்ணப்படுபவன் இவை உயிர்க்கு இடமாகலின் புரி எனப்பட்டன' எனச் சிறந்த பொருள் உரைக்கப்பட்டிருப்பது பெரும்பயன் தருவதாகும். | | இத்தகைய விழுப்பொருள் காண்டல் பேரறிஞர்க்கே கூடுவதாதல் அறியத்தக்கது. | | விளக்கங்கள்: | | பருப்பொருள் உடையனபோலத் தோன்றும் சொற்களுக்கு நுண்பொருள் விளக்கங்களும், தொகைப்பொருளான சொற்களுக்கு விரிப்பொருளான விளங்கங்களும் போன்ற பலவகை விளக்கங்கள் இவ்வுரைக்கண் அமைந்து விளங்குகின்றன, அன்ன சில வருமாறு | | "அம்பலத் துள்நிறைந்துநின் றாடும் ஒருவனே" என்பதில் 'ஒருவன்' என்பதற்குப் (தி,5,ப,1,பா.8) பின்வரும் சிறந்த நுண்பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. 'சிவபிரானை ஒருவன் என்றல்' உபநிடத வழக்கு. முழுமுதல் என்னும் கருத்துடையது. | | "அட்ட மாமலர் சூடி" (தி.5.ப.9.பா.4) என்பதற்கு 'அட்ட மாமலர் சிவபூசைக்குரிய புஷ்ப விதியில் கூறிய எட்டு மலர். புன்னை வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம். நீலோற்பலம், பாதிரி, அலரி செந்தாமரை என்னும் எட்டும் புலரிக்காலத்திற்கு உரியவை, 'கொல்லாமை, அருள், பொறியடக்கல்,பொறை, தவம், வாய்மை,அன்பு, அறிவு என்னும் எட்டும் ஞானபூசைக்குரிய எண்மலர்கள்' | | |
|
|