பக்கம் எண் :

218
 

திருக்கோயில் கட்டப்பெற்ற காலம்:

இத்திருக்கோயிலில் தில்லைச்சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்த முதற்பராந்தக சோழன் காலத்து ஒன்பது கல்வெட்டுக்கள் பொறிக்கப்பெற்று இருக்கின்றன. இப்பராந்தகன் கி.பி. 907 முதல் கி.பி. 948 வரை சோழமண்டலத்தை ஆட்சி புரிந்தான். இம்மன்னன் தன் முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டில் (907 + 38 = கி.பி. 945) 500 கழஞ்சு பொன் கொடுத்துள்ளான். அப்பொன்னைக்கொண்டு இக்கோயில் குடப்படை பீடத்துக்குமேல் திருப்பணி செய்யப்பெற்றது. அத்திருப்பணி முடிவு பெற்று கும்பாபிடேகஞ் செய்யக் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது சென்றிருக்கவேண்டும். பராந்தகன் ஆட்சியின் இறுதிக்காலத்தில் (கி.பி. 947) அதாவது, இன்றைக்கு 1040 ஆண்டுகளுக்கு முன்பே இக்கோயில் கற்றளியால் ஆக்கப் பெற்றதாகும்.1

கற்றளியைக் கட்டியவர்:

பராந்தகன் காலத்தில் இக்கற்றளியைக் (கருங்கல்கோயிலை) கட்டியவர் கற்றளிப்பிச்சர் ஆவர். இவருடைய பிரதிமை கர்ப்ப இல்லின் தென்புறத்தே அதாவது தட்சிணாமூர்த்தி சந்நிதிக்குக் கீழ்ப்புறத்தில் கைகளை மார்பிற்கு நேரே குவித்துத் திருவாவடுதுறை உடையாரை வழிபடும் நிலையில் இருக்கின்றது. கற்றளிப் பிச்சன் என்று அவரது பெயர் செதுக்கப்பட்டுள்ளது. பிச்சன் என்றால் அன்புடையவன் என்று பொருள் "நின்கோயில் வாயில் பெரிய பிச்சனாக்கினாய்" என்பது திருவாசகம்.

இக்கற்றளிப்பிச்சர் பிரதிமைக்குக் கிழக்குப் புறத்தே கைகளைத் தலைமேல் குவித்து வழிபடும் பிரதிமை ஒன்று இருக்கின்றது. இவர் கற்றளிப்பிச்சனார்இளவல் திருநாவுக்கரைய தொண்டராவர்.

கற்றளிப்பிச்சனார்

இக்கோயிலைக் கட்டினார் என்பதற்கு ஆதாரம்:

"ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேஸரி வன்மற்கு யாண்டு


1 See the Annual Reports on South Indian Epigraphy for the years 1925 - 1926. Numbers 101 - 162, 59 - 72.