பக்கம் எண் :

230
 

"வளவர் பெருமான் திருவாரஞ் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்

கிளருந் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற

அளவில் திருமஞ் சனக்குடத்தி லதுபுக்காட்ட வணிந்தருளி

தளரு மவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்"

எனவும், போற்றுவாராயினர்.

தலத்தைப் பற்றிய நூல்கள்: கச்சியப்பமுனிவர் இத்தல புராணத்தையும் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அகிலாண்ட நாயகிமாலையையும் பாடியுள்ளனர். இவைகள் இரண்டும் அச்சேறி வெளிவந்துள்ளன.

தலத்தின் பெருமையை உணர்த்தும் புராணப்பாடல் ஒன்று பின்வருமாறு:-

"மேதகைய பயன்விழைவோர் ஞானதலத்

துறைகுவது மேவாதாயின்

ஓதுக அத்தலப்பெயரை யாங்கதுவு முற்றாதே

லுரைப்பக்கேட்க

காதலொடு கேட்டவரு மூவகைய பாதகமுங்

கடந்துமேலாம்

போதமுணர்ந் தெமதடியிற் புக்கிருப்ப ரிஃதுண்மை

பொலங்கொம்பன்னாய்."

-திருவானைக்காப் புராணம் - தலவிசேடப் படலம்.

கல்வெட்டு:

இக்கோயிலில் பிற்காலத்துச் சோழ மன்னர்கள், பாண்டியர்கள், ஹொய்சலர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் இவர்கள் காலங்களில் பொறிக்கப்பெற்ற நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளெல்லாம் சரித்திர சம்பந்தமான உயரிய செய்திகளைத் தெரிவிக்கின்றன.

இக்கோயில் சிவபெருமான் திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர் என்னும் திருப்பெயர்களாலும், அம்பிகை அகிலாண்டநாயகி என்னும் பெயராலும் குறிக்கப்பெற்றுள்ளனர். இக்கோயில்