கல்வெட்டு:1 மதுரை கொண்ட கோப்பரகேசரி பன்மராகிய முதற்பராந்தக சோழன் (கி.பி. 907-948) இரண்டாம்பராந்தக சோழனது மகனாகிய ஆதித்த கரிகாலன், முதலாம் இராஜராஜ சோழன் இவர்கள் காலங்களில் இக்கோயிலில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இவ்வூரைத் திருவிடைமருதில், திருவிடைமருது எனக் குறிப்பிடுகின்றன. முதலாம் இராஜராஜன் காலத்தில் இது ஒரு நகரமாக விளங்கியிருந்தது. இச்செய்தி அம்மன்னனது ஆறாம் ஆண்டில் பொறிக்கப் பெற்ற "திரு இடைமருதுடையார் ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற சிற்றாயிலுடையாரும், தேவகன்மிகளும், சபையும், திருவிடைமருதில் நகரமும் இருந்து நம் பிராட்டியார் ஸ்ரீ பஞ்சவன் மாதேவியார் ஆழ்வாரைத் திருவடி தொழ வந்தருளினார்" என்னும் கல்வெட்டுப் பகுதியால் அறியக்கிடக்கின்றது. முதற் குலோத்துங்க சோழன் காலத்தும், அவனுக்குப் பிற்பட்டார் காலத்தும் பொறிக்கப் பெற்றுள்ள கல்வெட்டுக்கள் இவ்வூரைத் திருவிடைமருதூர் என்னும் பெயரால் குறிப்பிடுகின்றன. எனவே மிகப் பழங்காலத்தே இது ஒரு நகரமாக விளங்கியிருந்தே செய்தி புலப்படுகின்றது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் ஸ்ரீமூலஸ்தானத்துப் பெருமான் அடிகள் மூலஸ்தானத்து மகாதேவர், திருவிடைமருதுடையார், திருவிடைமருதில் ஆள்வார், திருவிடை மருதூருடைய தம்பிரானார் என்னும் திருப்பெயர்களாலும், நடராசப் பெருமான் மாணிக்கக்கூத்தர் என்னும் பெயராலும் வழங்கப் பெற்றுள்ளனர். இத்திருக்கோயிலின் முதல் பிராகாரத்து மேலைத் திருமாளி கையில் மூப்பிமாரில் இராஜராஜேச்சரத்துப் பதியிலாரில் அரிய பிராட்டியார், பெருமாள் பெரியதேவர் திருபுவன வீரதேவரின் (மூன்றாங்குலோத்துங்க சோழதேவரின்) முப்பத்தேழாம் ஆட்சி சிறப்பாகக் கூறப்பெற்றுள்ளது. தைப்பூசத் திருநாளில் தீர்த்தம் ஆடின பிற்றை நாள் தொடங்கி மூன்று நாளும், வைகாசித்
1 இக்குறிப்புக்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சிப் புலவர் திரு. வை. சுந்தரேச வாண்டையார் அவர்கள் எழுதி உதவியது. See the Annual Reports on South Indian Epigraphy for the years 1895-1907, No. 130-159 and 193-313; See also South Indian Inscriptions, Volumes.
|