பக்கம் எண் :

39
 

குருபாதம்

பதிப்புரை

"அறப்பெருஞ் செல்வி பாகத் தண்ணலஞ் செழுத்தாலஞ்சா
மறப்பெருஞ் செய்கை மாறா வஞ்சக ரிட்ட நீல
நிறப்பெருங் கடலும் யார்க்கும் நீந்துதற் கரிய வேழு
பிறப்பெனுங் கடலு நீத்த பிரானடி வணக்கஞ் செய்வாம்."

- பரஞ்சோதி முனிவர் (தி.11 ஏகாதசபா)

"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்பதைக் குறிக்கோள் உரையாகக் கொண்டு இவ்வுலகில் எண்பத்தொரு ஆண்டுகள் வாழ்ந்து, தேவாரத் திருமுறைகளில் 4, 5, 6ஆம் திருமுறைகளை நமக்கு அளித்த மெய்ஞ்ஞானச் செல்வர் திருநாவுக்கரசு சுவாமிகள். சமயாசாரியர்களில் இரண்டாமவராகப் போற்றப்பெறும் இவ் ஆசாரியர் திருப்பெயரும், அவர் அருளிய திருமுறைகளும் நம்மைப் பிறவிக் கடலிலிருந்து கரையேற்ற வல்லவை.

அப்பூதி அடிகள் எத்தவமும் செய்யாது திருநாவுக்கரசு என்னும்பெயரை எழுதியும் பேசியும் வழங்கியுமே சிவபதம் பெற்றதை அவர்தம் வரலாறு நன்குணர்த்தும்.

இலைமா டென்றிடர் பரியா ரிந்திர

னேயொத் துறுகுறை வற்றாலும்

நிலையா திச்செல்வ மெனவே கருதுவர்

நீள்சன் மக்கட லிடையிற்புக்

கலையார் சென்றரன் நெறியா குங்கரை

அண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண்

சிலைமா டந்திகழ் புகழா மூருறை

திருநா வுக்கர சென்போரே.

(தி.11 ஏகாதசபா)

என்பார் நம்பியாண்டார் நம்பிகள். நாவரசர் அருளிய தேவாரம் நம்மை இறைவன் திருவருளிலே அழுந்தச் செய்யும் மந்திரங்கள்.

தேவாரத் திருமுறைகள் பண்ணாங்கம், சுத்தாங்கம் என இரண்டு