பக்கம் எண் :

1003
 
687கலிவ லங்கெட ஆரழல் ஓம்புங்

கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்

வலிவ லந்தனில் வந்துகண் டடியேன்

மன்னு நாவல்ஆ ரூரன்வன் றொண்டன்

ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும்

உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்போய்

மெலிவில் வானுல கத்தவர் ஏத்த

விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே.

11

திருச்சிற்றம்பலம்


நிலையையும் உடன் அருளிச் செய்தார்.

பிரமதேவன் தானே உலகிற்கு முதல்வன் என்று சொல்ல, திருமால் அதனை மறுத்து, 'நானே முதல்வன்' என்று சொல்லியதனால் இருவருக்கும் போர் நிகழ்ந்தபொழுது, சிவபிரான் வைரவக்கடவுளைத் தோற்றுவித்து விடுக்க, அவரைக் கண்டு திருமால் அஞ்சி நீங்கியபின்னும் பிரமன், 'என் மகனே வா' என்று அழைத்தல் கண்டு, அவனது நடுத்தலையை நகத்தாற் கிள்ளி அவனது செருக்கை அடக்கி, வைகுந்தத்திற் சென்று திருமாலின் நெற்றியைத் தாக்கி அதனினின்றும் பாய்ந்த உதிரத்தை அக்கபாலத்தில் ஏற்றார் என்பது சிவ புராணத்துட் கூறப்படுதல் காண்க. இது, காஞ்சிப் புராணத்து வைரவேசப் படலத்துள்ளும் விரித்துக் கூறப்பட்டது.

''களேபரம்'' என்றது, கங்காளத்தையே ஆதலின், ''கங்காளன்'' என்றது, வாளா பெயராய் நின்றது. கங்காளத்தைச் சுமந்து நிற்கின்ற செயலை விடாதிருத்தலையே, ''மாவிரதம்'' என்று அருளினார். எனவே, இதுபோல்வதொரு கோலத்தைக் கொண்டே, 'மாவிரதம்' என்னும் சமயம் உளதாயிற்றென்க. ''சான்று'' என்றது, 'அறியும் வழி' என்னும் பொருளதாய் நின்றது. 'குணம், குறி' முதலியவை ஒன்றும் இல்லாமையின், அதனைக் காட்டுதல் அரிதாயிற்று. 'அரியவன்' என்புழியும் இரண்டன் உருபு விரிக்க. ''தன்னை'' என வந்த பலவற்றுள்ளும், 'தன்' என்பது, சாரியை. மான்று - மயங்கி. அஃது அறியாமையால் வரும் திரிபு உணர்ச்சியைக் குறித்தது.

11. பொ-ரை: வறுமையின் வலிமை கெடும்படி அரிய வேள்வித் தீயை வளர்த்தற்கு ஏதுவான, பெரியோர் பலரும் போற்றிக் கற்ற