711. | ஒப்பி லாமுலை யாள்ஒரு பாகா | | உத்தமா மத்தம் ஆர்தரு சடையாய் | | முப்பு ரங்களைத் தீவளைத் தங்கே | | மூவ ருக்கருள் செய்ய வல்லானே | | செப்ப ஆல்நிழற் கீழ்இருந் தருளுஞ் | | செல்வ னேதிரு வாவடு துறையுள் | | அப்ப னேஎனை அஞ்சல்என் றருளாய் | | ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே. | | 3 |
712. | கொதியி னால்வரு காளிதன் கோபங் | | குறைய ஆடிய கூத்துடை யானே | | மதியி லேன்உடம் பில்லடு நோயான் | | மயங்கி னேன்மணி யேமண வாளா | | விதியி னால்இமை யோர்தொழு தேத்தும் | | விகிர்த னேதிரு வாவடு துறையுள் | | அதிப னேஎனை அஞ்சல்என் றருளாய் | | ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே. | | 4 |
சடையை உடையவனே, முப்புரங்களைத் தீவளையச் செய்து, அப்பொழுதே அவற்றில் இருந்தவர்களுள் மூவருக்கு மட்டில் அருள் செய்ய வல்லவனே, அறத்தைச் சொல்லுதற்கு ஆல் நிழலில் அமர்ந்தருளிய செல்வனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற என் அப்பனே! தேவர்களாகிய விலங்குகளுக்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, எனக்கு உறவாவார் உன்னையன்றி வேறு யாருளர்! என்னை 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்யாய். கு-ரை: திருவாவடுதுறையில் உள்ள அம்மைக்கு, 'ஒப்பிலா முலையாள்' என்பது பெயராய் வழங்குதல் நினைக்கத் தக்கது. ''தீ வளைத்து'' என்றதனை, 'தீயாய் வளைத்து' என விரித்தலுமாம். 4. பொ-ரை: சீற்றத்தொடு வந்த காளியினது கோபம் தணியும்படி அவளோடு எதிர்நின்று ஆடிய நடனத்தை யுடையவனே, மாணிக்கம் போல்பவனே, மணவாளக் கோலத்தினனே, தேவர்கள், முறைப்படி வணங்கித் துதிக்கின்ற இறைவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, தேவர்களாய் விலங்குகட்கு ஆண் சிங்கமாய்
|