பக்கம் எண் :

1033
 

71. திருமறைக்காடு

பதிக வரலாறு:

சுவாமிகள், திருநாகைக்காரோணம் பணிந்து பல தலங்களையும் வணங்கிக்கொண்டு திருமறைக்காடணைந்து, திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திறக்கவும் அடைக்கவும் பாடிய திருவாயிலை அடைந்து, நாயன்மார்களை நினைந்திறைஞ்சி, மறைகள் பூசித்த மறைக்காட்டுப் பெருமானைப் பணிந்து பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. கழறிற். புரா. 87)

குறிப்பு: இத்திருப்பதிகம், திருமறைக்காடு, சிவபெருமானுக்கு இடமாய் நிற்கும் சிறப்பினை வியந்து அருளிச்செய்தது.

பண்: காந்தாரம்

பதிக எண்: 71

திருச்சிற்றம்பலம்

719.யாழைப்பழித் தன்னமொழி

மங்கைஒரு பங்கன்

பேழைச்சடை முடிமேற்பிறை

வைத்தான்இடம் பேணில்

தாழைப்பொழி லூடேசென்று

பூழைத்தலை நுழைந்து

வாழைக்கனி கூழைக்குரங்

குண்ணும்மறைக் காடே.

1



1. பொ-ரை: யாழின் இசையைப் பழித்த அத்தன்மையையுடைய சொற்களை உடைய மங்கையை ஒரு பாகத்தில் உடையவனும், பேழை போலும் சடைமுடியில் பிறையைச் சூடினவனும் ஆகிய இறைவனது இடத்தை அறிந்து வழிபடவேண்டின், அது, எளிய குரங்குகள் தாழம் புதரூடே புகுந்து, சிறிய புழைகளில் நுழைந்து, வாழைப்பழத்தைப் பறித்து உண்கின்ற திருமறைக்காடேயாகும்.

கு-ரை: 'பழித்த' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. பல பொருள்கள், கிடத்தலின், இறைவனது சடைமுடியை, பேழைபோல்வதாக