பக்கம் எண் :

104
 

முடிவுகள் ஆகும்.

விரிந்த திருவுளம்:

சைவம் பரந்த நிலை உடையது. உலகநெறிக் கோட்பாடு இச் சமயத்தின் உயர்நோக்கு ஆகும். பாரெலாம் போற்றும் வண்ணம் பரந்து, விரிந்த இச்சமயத்தின் விரிந்த நிலையை அறிஞர் உலகு நன்கு அறியும்.

'அறிவினான் மிக்க அறுவகைச் சமயம்
அவ்வவர்க்கங்கே ஆரருள் புரிந்து'

(தி. 7 ப. 55 பா. 9)

என்பர் நம்பியாரூரர், அப்பரடிகள்,

'விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்து
எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற் கேற்றதாகும்'

(தி. 4 ப. 60 பா. 9)

எனப்பாடுவதும் இங்கு ஒப்பிடற்குரியது. சுந்தரமூர்த்திப் பெருமானின் உலகநெறிமை திருத்தொண்டத்தொகையின் பத்தாம் திருப்பாட்டின் வாயிலாக இனிது விளங்குவதாகும். அதன்கண் (1) பத்தராய்ப் பணிவார் (2) பரமனையே பாடுவார் (3) சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் (4) திருவாரூர்ப் பிறந்தார் (5) முப்போதும் திருமேனி தீண்டுவார் (6) முழுநீறு பூசிய முனிவர் (7) அப்பாலும் அடிசார்ந்தார் (8) பொய்யடிமையில்லாத புலவர் ஆகிய தொகையடியார்களைக் குறிப்பிடுகின்றார்.1

காலம், இடம், சமயம் கருதாது இறையருள் தொண்டு ஒன்றே கருதி அவ்வனைவரையும் பணியும் அடிகள் விரிந்த திருவுள்ளத்தினைத் தொழுது பயன்கோடல் வேண்டும். தமிழ் நாட்டின் எல்லைக்கப்பாலும் எங்கெல்லாம் அடியவர்கள் உண்டோ, அவர்களையெல்லாம் அடியார்களாகக்கொண்டு பணியும் பெருந்தகவு நம்மனோராற் பெரிதும் மேற்கொண்டு போற்றற்குரியதாகும்.


1. There is a significant remark in one of Sundarar' Shymns to the effect that he is a devotee of, "the saints 'beyond', of the Lord 'beyond'. Here he refers to the spatial and temporal limits within which the saints he has praised lived their earthly lives.' - Of Human Bondage and Divine Grace. V.A. Devasenapati, M.A., Ph.D., 1963 p. 58.