789. | கதிர்க்கொள் பசியே யொத்தேநான் | | கண்டே னும்மைக் காணாதேன் | | எதிர்த்து நீந்த மாட்டேன்நான் | | எம்மான் றம்மான் தம்மானே | | அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் | | தையா றுடைய அடிகேளோ! | | 9 | 790. | கூசி அடியார் இருந்தாலுங் | | குணமொன் றில்லீர் குறிப்பில்லீர் | | தேச வேந்தன் திருமாலும் | | மலர்மேல் அயனுங் காண்கிலார் |
வாழ்கின்றவர்கள் தீர்த்த நீரின்மேல் வைத்த விருப்பத்தினால் முழுகி மகிழுமாறும் காவிரியின்கண் நீர் பெருகாநின்றது' என்றவாறு. 9. பொ-ரை: என் தந்தை தந்தைக்கும் பெருமானே, மேகங்கள் துளிகளைச்சிதறி மழையைப் பொழிதலால் வெள்ளம் நுரையைச் சிதறிப் பரந்து வருகையினாலே முழங்குகின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள், நான் உம்மை, பசியுடையவன் நெற்கதிரைக் கண்டாற் போலக் கண்டேன்; அவன் உணவைக் கண்டாற்போலக் காணேனாயினேன்; நீரின் வேகத்தை எதிர்த்து நீந்தி அக்கரையை அடைய நான் வல்லேனல்லேன்; ஓலம்! கு-ரை: ''கதிர்க்கொள்'' என்றதிற் ககர ஒற்று விரித்தல், கொள்ளுதல், கைகூடப் பெறுதல். பசியுடையவனை, ''பசி'' என்றது. பான்மை வழக்கு. ''கதிர்க்கொள் பசியை ஒத்து'' என்று அருளினாராயினும், ''கண்டேன்'' என்றதற்கேற்பத் தொழிலுவமமாக மாற்றியுரைத்தலே திருவுள்ளம் என்க. பசியுடையவன் நெற்கதிரைக் கண்டாற் போலக் கண்டமை, அக்கரைக்கண் கண்டமை எனவும், உணவைக் கண்டாற்போலக்காணாமை, திருமுன்பு சென்று காணாமை எனவும், கொள்க. 10. பொ-ரை: நாடெங்கும் உள்ளவர்கள் ஐயமின்றி வந்து மூழ்குமாறு, தெளிந்த நீராகிய அருவியைக் கொணர்ந்து எங்கும் தங்குகின்ற
|