899. | பரந்த பாரிடம் ஊரி டைப்பலி | | பற்றிப் பாத்துணுஞ் சுற்ற மாயினீர் | | தெரிந்த நான்மறையோர்க் கிட மாய திருமிழலை | | இருந்து நீர்தமி ழோடி சைகேட்கும் | | இச்சை யாற்காசு நித்தல் நல்கினீர் | | அருந்தண் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே. | | 8 |
900. | தூய நீரமு தாய வாறது | | சொல்லு கென்றுமை கேட்கச் சொல்லினீர் | | தீய றாக்குலையார் செழு மாடத் திருமிழலை | | மேய நீர்பலி யேற்ற தென்னென்று | | விண்ணப் பஞ்செய் பவர்க்கு மெய்ப்பொருள் | | ஆய வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே. | | 9 |
இவற்றிலும், அந்திக் காலத்திலும் உயர்வாக இடுகின்ற பூக்களின் ஒப்பனையை அணிந்துகொண்டு, வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே, நீர், உம்மை வணங்கிய அருச்சுனன், பகீரதன், பல அடியவர், சித்தர் முதலியோர்க்கு முற்காலத்தில் அருள் பண்ணினீர்; அதுபோல, அடியேனுக்கும் அருள்செய்யீர். கு-ரை: அந்தியை வேறோதினார், அஃது ஒப்பனைக்குச் சிறந்த காலமாதல் பற்றி. வான் - உயர்வு. 8. பொ-ரை: மிக்க பூத கணங்களை, ஊர்களில் பிச்சையேற்று அதனைப் பகுத்து உண்ணும் சுற்றமாக உடையவரே, ஆராய்ந்த நான்கு வேதங்களை உணர்ந்தோராகிய அந்தணர்க்கு இடமான திருமிழலையுள், அரிய, குளிர்ந்த வீழி மரத்தின் நிழலை இடமாகக்கொண்டவரே, நீர், இனிதிருந்து இசையைத் தமிழோடு கேட்கும் விருப்பத்தால் அத்தகைய தமிழைப் பாடியோர்க்குப் பொற்காசினை நாள்தோறும் வழங்கினீர்; அதுபோல, அடியேனுக்கும் அருள் செய்யீர். கு-ரை: ''உண்ணும்' என்ற பெயரெச்சம், 'சுற்றம்' என்னும் ஏதுப்பெயர் கொண்டது. இத்தலத்தில் இறைவர்; இசைத் தமிழைப் பாடியோர்க்கு நித்தல் காசு நல்கியது, திருஞானசம்பந்தர்க்கும், திருநாவுக்கரசர்க்கும் என்பது நன்கறியப்பட்டது. 9. பொ-ரை: 'தீ வளர்த்தலை ஒழியாத கூட்டத்தவராகிய அந்தணர்களது, வளவிய மாடங்களையுடைய திருமிழலையுள்
|