நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே. | 10 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை: கரந்தை முதலியவற்றில், 'இலை', 'பூ' என்பவற்றை ஏற்ற பெற்றியாற் கொள்க, "கூவிளம்" என்றதன்பின், 'அணிந்த' என்பது, எஞ்சிநின்றது, இனி, 'பரந்த-பரவ அணிந்த' என்று உரைத்தலும் ஆம். நிரம்பற்பாலது அன்பேயாகலின், அஃது, ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. "மேலையார் மேலையார் மேலார்" என்றதற்கு, மேல் (தி. 7 ப. 96 பா. 7) உரைத்தவாறுபற்றி உரைக்க, உரைக்கவே, 'சிவலோகத்தில் இருப்பவராவர்' என்பது பொருளாமாறு அறிக. ஏயரகோன் கலிக்காமர் புராணம் | | பொங்குதிருத் தொண்டருடன் | உள்ளணைந்து புக்கிறைஞ்சித் | துங்கஇசைத் திருப்பதிகம் | தூவாயா என் றெடுத்தே | இங்கெமது துயர்களைந்து | கண்காணக் காட்டாய்என்று | அங்கணர்தம் முன்னின்று | பாடியருந் தமிழ்புனைந்தார். | 303 | | தி. 12 சேக்கிழார் |
|