செப்பு முதல் உரு எழுபதினால் மேற்படி கோலால் நிறை தொள்ளாயிரத்து இருபத்தைம்பலனே கஃசு. தராமுதலுரு நாற்பத்துநாலினால் மேற்படி கோலால் நிறை இரண்டாயிரத்து எண்ணூற்று நாற்பத்தைம் பலவரை. தராகுத்துவிளக்கு - கருவும் உட்பட விளக்கு முப்பது. இவ்வூர்க் கவுணியன் இந்நிலத்தானாக வார்த்த விளக்கு ஒன்று ஆக விளக்கு முப்பத்தொன்று. அணிகலன்களும் பரிகலன்களும்: உடையார் ஸ்ரீ இராஜேந்திர சோழதேவர் நம்பிராட்டியார் திரைலோக்கியமாதேவியாரின் தாயாரான இராமன் அபிமான தொங்கியார், திருவாவடுதுறை உடையார்க்கு அமுதுசெய்தருள வெள்ளித் தளிகை ஒன்று குடிஞைக் கல்லால் எழுபதின் கழஞ்சு நிறை உள்ளதும், உடையார்க்குப் பொற்கொள்கை ஒன்று குடிஞைக் கல்லால் செம்பொன் நாநூற்று ஒருபத்து முக்கழஞ்சரை நிறையுள்ளதும் ஆகிய இவ்விரண்டையும் கொடுத்திருந்தனர். உடையார் இராஜாதிராஜதேவர், பெரியவேளத்து அலோயன் அணுக்கி, மேற்படி வேளத்து மற்றொரு அம்மையார் இவர்கள் கொடுத்த பொன்னால் பொற்பூ இருபத்தேழு, செங்கழுநீர்ப்பூ முப்பத்தாறு, மாந்தளிர் ஒன்று, பிட்ச தேவர் கண்டக் காறை ஒன்று, பொற்கை ஈச்சோப்பி ஒன்று. இவைகள் செய்யப்பெற்று அணிவிக்கப்பெற்றுவந்தன. திருவிழா: இத் திருக்கோயிலில் புரட்டாசி மாதத்தில் ஏழு நாள்களில் திருவிழா நடைபெற்றுவந்தது. அக்காலம் மூலநட்சத்திரத்தன்று கொடியேறி பூரட்டாதி நட்சத்திரத்தன்று தீர்த்தமாடுவது வழக்கம். இச்செய்தி, 'திருமா எடுத்த நாள் மூல முதல் அடக்கடவ அரிசி அரிய சிவயோகிகளுக்கும் பத்தர்களுக்கும், மாகேசுவரர்களுக்கும் அரிசி தூணியும், பூராடத்தினன்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி தூணிப்பதக்கும், பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி கலமும், உத்திராடத்தினன்று சிவயோகிகளுக்கு அரிசி கலமும் பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி முக்கலமும் திருவோணத்தினன்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி இருகலமும், பன்மாகேசுவரர்களுக்கு அடும் அரிசி ஆறுகலமும், அவிட்டத்தினன்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி முக்கலமும், பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி ஏழுகலமும், சதயத்தன்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி நாற்கலமும், பன்மாகேசுவர்க்கு அடும் அரிசி எண்கலமும், தீர்த்தமாடும் பூரட்டாதி ஞான்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி ஐங்கலமும் பன்மா
|