பக்கம் எண் :

244
 

சக்கரவர்த்தி காலத்தில் எதிரிலி சோழ சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரையும் பெற்றிருந்தது.

பிறசெய்தி :

இக்கோயிலிலுள்ள ஒரு பிரதிமையின் கீழ் 'வெண்ணாயிலுடையான் ஈழத்தங்கிள்ளை ஆரூரன்' என்னும் பெயர் தீட்டப்பெற்றுள்ளது.

32. திருக்கூடலையாற்றூர்

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திலிருந்து இருபது கி. மீ. தொலைவில் உள்ள குமாரகுடி என்னும் ஊர்க்குச் சென்று அங்கிருந்து ஆறு கி. மீ. சென்றால் இவ்வூரை யடையலாம். இக்காலம் பேருந்து வசதி உண்டு.

மணிமுத்தா நதியும் வெள்ளாறும் கூடுமிடத்தில் உள்ளது. ஆகையால் இப்பெயர் பெற்றது. வெள்ளப் பெருக்கினால் கோயில் அழிந்தமையால், அக்கற்களைக் கொண்டு வந்து ஊரில் திருக்கோயில் கட்டி அதில் இறைவர் இறைவியாரை எழுந்தருளப் பண்ணியுள்ளனர்.

சுந்தரமூர்த்தி நாயனார் திருமுதுகுன்றத்துக்கு எழுந்தருளியபோது இக்கூடலையாற்றூரை வணங்காமல் போந்தருள. இறைவர் அந்தணர் வடிவங்கொண்டு முன் செல்ல, சுந்தரமூர்த்தி நாயனார் திருமுதுகுன்றத்துக்கு வழி யாது? என்று கேட்டருளினார். அந்தணராகிய இறைவர், 'கூடலையாற்றூர்க்குப் போகும்வழி இது' என்று கூறி மறைந்தருளினார். சுந்தரமூர்த்தி நாயனார் அவ் வந்தணர் சிவபெருமானே என்று அறிந்து திருவருளை வியந்து பாடியருளிய தலம் இது.

இறைவர் :- நெறிகாட்டு நாயகர்.

இறைவி :- புரிகுழல் நாயகி.

33. திருக்கேதாரம்

காசியிலிருந்து தொடர் வண்டியில் ஹரித்துவார் சென்று அங்கிருந்து பேருந்துகளில் கௌரிகுண்டம் வரைசென்று அங்கிருந்து