இளமையாக்கினார் கோயிலுக்கு எதிரில் இருக்கும் குளம் ஆகும். அனந்த தீர்த்தம் : இது நடராசப்பெருமான் திருக்கோயிலுக்கு மேற்கே திருவனந்தேச்சுரத்துக்கு முன்பு இருக்கும் திருக்குளமாகும். நாகச்சேரி : இது அனந்தேச்சுரத்துக்கு மேல்பால் இருக்கும் திருக்குளமாகும். பிரமதீர்த்தம் : இது நடராசப்பெருமான் திருக்கோயிலுக்கு வட மேற்கே இருக்கும் திருக்களாஞ்சேரியில் உள்ள திருக்குளமாகும். சிவப்பிரியை : இது நடராசப்பெருமான் திருக்கோயிலுக்கு வடக்கேயுள்ள பிரமசாமுண்டி கோயிலுக்கு முன்புள்ள திருக்குளமாகும். திருப்பாற்கடல் : இது சிவப்பிரியைக்குத் தென்கிழக்கில் இருக்கிறது. காணமுத்தி தரும் தலம். அர்த்தயாமத்தில் எல்லாத் தலங்களிலுமுள்ள மூர்த்திகளின் கலைகள் வந்து ஒடுங்கப்பெறுவது. வியாக்கிரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், சூதர் முதலான முனிவர்களும், திருநீலகண்டர், திருநாளைப் போவார், கூற்றுவர், கணம் புல்லர், கோச்செங்கட் சோழர், மாணிக்கவாசகர், சேக்கிழார் என்னும் நாயன்மார்களும், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாசாரியார் என்னும் சந்தான குரவர்களும், இரணியவர்மர், சேந்தனார், பெற்றான் சாம்பானார், என்னும் அடியார்களும் வழிபட்டு, முத்திபெற்ற தலம். மாணிக்க வாசகப் பெருந்தகையார் புத்தரை வாதில் வென்று ஊமைப்பெண்ணைப் பேசுவித்து, சைவ சமயமே மெய்ச்சமயம் என்பதை நிலை நாட்டியது; நம்பியாண்டார் நம்பி கனகசபையின் மேல்பால் உள்ள அறை ஒன்றில் தேவாரங்களைக் கண்டருளியது; தெய்வப்பாக்கிழாராகிய சேக்கிழார் திருத்
|