பக்கம் எண் :

251
 

என்று சம்பந்த சுவாமிகளாற் (தி. 1 ப. 80 பா. 4) கூறப்படுகிறது.

சிற்றம்பலம் :

நடராசப்பெருமான் நடம் புரிந்தருளும் இடம். இது "தூயசெம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம்" (தி. 5 ப. 2 பா. 8) என்றும் "தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம்" என்றும் அப்பர் சுவாமிகளால் விளக்கப்படுகிறது.

கனகசபை :

பெருமான் அபிடேகங்கொண்டருளுமிடம். சிற்றம்பலத்திற்கு முன்னுள்ளது.

நிருத்தசபை :

பெருமான் ஊர்த்துவ தாண்டவம் புரிந்தருளுவது. கொடி மரத்தின் தென்பாலுள்ளது.

இராஜசபை :

இது ஆயிரங்கால் மண்டபம் ஆகும்.

கல்வெட்டு :

இக்கோயிலில் பிற்காலச் சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற் குலோத்துங்க சோழன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜாதிராஜ தேவன், மூன்றாம் குலோத்துங்கசோழதேவன், மூன்றாம் இராஜராஜ சோழன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியமன்னர்களில் திரிபுவனச்சக்கரவர்த்தி வீரபாண்டியதேவன், சடாவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி சுந்தரபாண்டியதேவன், மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி வரகேரளனாகிய குலசேகரதேவன் இவர்கள் காலங்களிலும், பல்லவரில் அவனி ஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்கதேவன் காலங்களிலும், விஜய நகர வேந்தர்களில் வீரப்பிரதாபகிருட்டிண தேவமகாராயர், வீரப்பிரதாப வேங்கட தேவமகாராயர், ஸ்ரீரெங்க தேவமகாராயர், அச்சுத தேவமகாராயர், வீரபூபதிராயர் இவர்கள் காலங்களிலும் : கொச்சி பரம்பரையில் சேரமான் பெருமாள் நாயனாரின் வழித் தோன்றிய இராமவர்ம மகாராசா காலத்திலும்;