45. | வல்ல தெல்லாம் சொல்லி உம்மை | | வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன் | | றில்லை என்னீர் உண்டும் என்னீர் | | எம்மை ஆள்வான் இருப்ப தென்நீர் | | பல்லை உக்க படுத லையிற் | | பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங் | | கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் | | ஓண காந்தன் தளியு ளீரே. | | 4 |
46. | கூடிக் கூடித் தொண்டர் தங்கள் | | கொண்ட பாணி குறைப டாமே | | ஆடிப் பாடி அழுது நெக்கங் | | கன்பு டையவர்க் கின்பம் ஓரீர் |
பிழைத்தல்தான் செயற்பாலதோ? (சொல்லீர்) கு-ரை: காலங் கண்ணிய, "போழ்து" இரண்டும். ஈண்டு வினையெச்ச விகுதிகளாய் நின்றன. பழித்தல் வாய்பாட்டால் அருளிச் செய்கின்றமையின், 'மதியுடையவர் செய்கை செய்வீர்' என்பது பாடமாகாமை யறிக. 'ஆபத்' என்னும் ஆரியச்சொல், "ஆவத்" என வந்து, ஈறு திரிந்து நின்றது. 'ஆபத்' என்றே ஓதுவார் பலர். 4. பொ-ரை: 'திருவோணகாந்தன்தளி' என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, யாம் வல்ல கருத்துக்கள் பலவும் சொல்லி உம்மை வாழ்த்தியபோதும், நீர் வாய்திறந்து, எமக்கு ஈய யாதேனும் ஒருபொருளை, 'இல்லை' என்றும் சொல்கின்றிலீர்; 'உண்டு' என்றும் சொல்கின்றிலீர்; நீர் எம்மைப் பணிகொள்ள இருத்தல் எவ்வாறு? நாள்தோறும் சென்று, பல் நீங்கிய, இறந்தாரது தலையில் இவ்வுலகில் பிச்சை ஏற்கத் திரிந்தும், இல்வாழ்க்கையை விரைவில் விட்டொழிய மாட்டீர். கு-ரை: 'உமக்கு அடியேங்களாகிய நாங்கள் எங்ஙனம் வாழ்வோம்' என்பது குறிப்பெச்சம். "பல்லை" என்னும் ஐ, சாரியை, 'திரிந்தும்' என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. பகல் - நாள். 'இருப்பதே நீர்' என்பதும் பாடம். 5. பொ-ரை: 'திருவோணகாந்தன்தளி' என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, நீர், தம்மிற் பலகாலும் கூடி., அடியவர்க்கு உரிய, பொருந்திய தாளத்தொடுபட்ட பாட்டுக்களைக் குற்றம் உண்டா
|