63. | தோற்ற முண்டேல் மரண முண்டு | | துயர மனைவாழ்க்கை | | மாற்ற முண்டேல் வஞ்ச முண்டு | | நெஞ்ச மனத்தீரே | | நீற்றர் ஏற்றர் நீல கண்டர் | | நிறைபுனல் நீள்சடைமேல் | | ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி | | யென்ப தடைவோமே. | | 2 |
காரணமாக, தலைவராகிய அரசர்க்கும் அறிவுறுத்தார். "மத்தயானை" என்றதில் தகரமெய், விரித்தல். 'ஆரும் இல்லை' என்றது, 'இறைவன் ஒருவனே உளன்' என்னும் குறிப்பினது. 'செத்தபோதேல்' எனவும் பாடம் ஓதுப. இழித்தற் குறிப்பால், நெஞ்சினை உயர்திணையாக விளித்தருளினார். இது வருகின்ற திருப்பாடல்களிலும் ஒக்கும். "வம்மின்" என்றது, ஏனைய திருப்பாடல்களிலும் இயைய அருளியதாம். 'என்பது' என்புழி ஏழாவது விரிக்க. 2. பொ-ரை: நினைத்தற் றன்மையை யுடைய நெஞ்சீரே, யாவர்க்கும், பிறப்பு உளதாயின், இறப்பும் ஒருதலையாக உண்டு; அவற்றிற்கு இடையே உள்ள இல்வாழ்க்கையும் துன்பம் தருவதே. அவ்வாழ்க்கையின் பொருட்டுச் சொல்லப்படும் சொல் உளதாயின். அதன்கண் பெரும்பாலும் வஞ்சனை உளதாவதேயாம். அதனால், அவைகளின் நீங்குதற் பொருட்டு, வெண்ணீற்றை யணிந்தவரும், இடப வாகனத்தை உடையவரும், மிக்க நீரை நீண்ட சடையிலே தாங்கியவரும் ஆகிய இறைவரது திருக்கோயிலை, 'திருஎதிர்கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர். கு-ரை : "மனம்" என்றது, நினைத்தற் றன்மையை விதந்தருளியவாறு. குடிப்பிறப்பும், சால்பும் உடையார் சிலரேயாக, அனையரல்லாதாரே உலகத்துப் பலராதலானும், அவர், 'நகை, ஈகை, இன்சொல், இகழாமை' (குறள் - 953.) என்பனவும் 'அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை' (குறள் - 983.) என்பனவும் இன்றியே வாழ்தலானும், "மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு" என்று அருளிச் செய்தார். 3. பொ-ரை: நெஞ்சீரே, துன்பத்தைக் கொண்ட உடம்பானது, உலகியலில் உழன்று உழன்று மெலிந்து, விரைய வீழ்ந்தொழியாத முன்னே, மாவடுவின் வடிவைக் கொண்ட கண்களையுடைய மாதரது
|