64. | செடிகொள் ஆக்கை சென்று சென்று | | தேய்ந்தொல்லை வீழாமுன | | வடிகொள் கண்ணார் வஞ்ச னையுட் | | பட்டு மயங்காதே | | கொடிகொ ளேற்றர் வெள்ளை நீற்றர் | | கோவண ஆடையுடை | | அடிகள் கோயில் எதிர்கொள் பாடி | | யென்ப தடைவோமே. | | 3 |
65. | வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் | | வஞ்ச மனத்தீரே | | யாவ ராலு மிகழப் பட்டிங் | | கல்லலில் வீழாதே | | மூவ ராயும் இருவ ராயும் | | முதல்வன் அவனேயாம் | | தேவர் கோயில் எதிர்கொள் பாடி | | யென்ப தடைவோமே. | | 4 |
மயக்கத்திற் பட்டு மயங்காது, தம் கொடி தன்னிடத்துப் பொருந்தக் கொண்ட இடபத்தை யுடையவரும், வெண்மையான நீற்றை அணிந்தவரும், கோவணமாக உடுத்த ஆடையை உடைய தலைவரும் ஆகிய இறைவரது திருக்கோயிலை, 'திருஎதிர்கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர். கு-ரை: "வஞ்சனை" என்றது, இளமை, அன்பு முதலியவற்றது நிலையாமையை. ஆடையைக் கோவணமாக உடுத்தலாவது, கீழ்வாங்கிக் கட்டுதல். ஈண்டும் நெஞ்சிற்கு அறிவுறுத்தலே திருவுள்ளமாகலின், அவ்வாறு உரைக்கப்பட்டது. பிற திருப்பாடல்களிலும் இவ்வாறுரைப்பன அறிந்துகொள்க. 4. பொ-ரை: வஞ்சனையையுடைய நெஞ்சீரே, நமக்கு உட்பட்டவராயே ஐவர் பகைவர் வாழ்வர்; அதனால், அவரது தீமையால் யாவராலும் இகழப்படும் நிலையை எய்தித் துன்பத்தில் வீழாது, தாமே மும்மூர்த்திகளாயும், தமது ஆணை வழியால் மாலும் அயனுமாயும், எவ்வாற்றானும் உலகிற்கு அவரே முதல்வராகும் முழுமுதல்வராகிய இறைவரது திருக்கோயிலை, 'திருஎதிர்கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.
|