பக்கம் எண் :

539
 

14. திருப்பாச்சிலாச்சிராமம்

பதிக வரலாறு:

சுந்தரர் திருவானைக்காவைத் தரிசித்து அதன் அருகில் உள்ள தலங்களுக்குச் சென்று வழிபட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் அடைந்து சிவபெருமானை வழிபட்டுப் பொருள் வேண்டினார். அதனை இறைவன் அருளாதொழியவும் தோழமையுறவினால் அடியார்கள் முன்னே முறையிடுவார் போலப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 78 - 81)

குறிப்பு: இத் திருப்பதிகம், இறைவரைப் பொன் வேண்டி, பெறாமையால் வருந்தி, அடியார்கள் முன்னே முறையிட்டருளிச் செய்தது.

பண்: தக்கராகம்

பதிக எண்: 14

திருச்சிற்றம்பலம்

134.வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்

நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி

உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை

உரைத்தக்கால் உவமனே யொக்கும்

பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு

பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்

பித்தரே யொத்தோர் நச்சில ராகில்

இவரலா தில்லையோ பிரானார். 

1



1. பொ-ரை: எனது தலையையும், நாவையும், நெஞ்சத்தையும், இத்திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானார்க்கே உரியன ஆக்கினேன்; திருவடித் தொண்டினையும் அவருக்கே வஞ்சனை சிறிதும் இன்றிச் செலுத்தினேன்; இவற்றை யானே சொல்லின், பொய்போல்வதாகும். இந்நிலையில், அவர் படம் விரித்த பாம்பினைக் கட்டிக்கொண்டு ஒரு கோவணத்தோடு இருந்து, பித்தரோடே ஒத்து, சிறிதும் திருவுளம் இரங்கிலராயினும், எம்மைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!

கு-ரை: ‘தனக்கு’ என்றது, பன்மை ஒருமை மயக்கமாய்,