பக்கம் எண் :

552
 
வல்லே னல்லேன் பொன்னடி பரவ

மாட்டேன் மறுமையை நினைய

நல்லே னல்லேன் நானுனக் கல்லால்

நாட்டியத் தான்குடி நம்பீ. 

4

150.மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக்

கருதா தார்தமைக் கருதேன்

ஒட்டா யாகிலும் ஒட்டுவன் அடியேன்

உன்னடி அடைந்தவர்க் கடிமைப்

பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன்

பாடியும் நாடியும் அறிய

நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன்

நாட்டியத் தான்குடி நம்பீ. 

5



நில்லாதவனல்லேன்; அங்ஙனம் நின்றாரது வரலாறுகளை நினைய மாட்டாதவனல்லேன்; உனது பொன் போலும் திருவடிகளைப் பரவுமிடத்து அதற்குப் பயனாக மறுமையின்பத்தை நினைய மாட்டேன்; உனக்கு அல்லது வேறு ஒருவற்கு நான் உறவினன் அல்லேன்; இஃது என் அன்பிருந்தவாறு.

கு-ரை: ‘பல’ என்றதில் முற்றும்மை தொகுத்தலாயிற்று. ‘நீதி’ என்றது அவர் தமக்கு உரியதாகக் கொண்ட ஒழுக்கமும், அதன்கண் நிகழ்ந்த நிகழ்ச்சியும் ஆகிய வரலாறுகளைக் குறித்தது, ‘வல்லேன்’ என்றது ‘வல்லுதல்’ என்னும் தொழிலின் மறைவினை. ‘பரவ’ என்னும் செயவெனெச்சம், ‘பரவுமிடத்து’ என்பதன் திரிபாய் வந்தது. ‘மறுமையை நினைந்து பரவமாட்டேன்’ என்றது, ‘பயன் கருதாதே வழிபடுவேன்’ என்றபடி. ‘நல்லேன்’ என்பதில் நன்மை, அது செய்தற் காரணமாகிய உறவைக் குறித்தது. ‘உனக்கல்லால் நான் உறவினனல்லேன்’ என்றதனானே, 'நீயன்றி என்னை வேறொருவரும் உறவினனாக நினையார்’ என்பதும் போந்தது; போதரவே, சுவாமிகளுக்கும் இறைவர்க்கும் தம்முள் உளதாகிய கெழுதகைமை பெறப்பட்ட வாறறிக.

5. பொ-ரை: திருநாட்டியத்தான் குடியில் எழுந்தளியிருக்கும் நம்பியே, தேன் நிறைந்த பூவை யணிந்த கூந்தலையுடைய மலைமகளுக்குக் கணவனாகிய உன்னை நினையாதவரை நான் நினையேன்; நீ எனக்குத் தலைவனாய் என்னொடு ஒட்டாதே போவாயாயினும்,