22. திருப்பழமண்ணிப்படிக்கரை பதிக வரலாறு: நம்பியாரூரர் திருத்தில்லையை வணங்கி, திருக்கருப்பறியலூர் தொழுது பரவி, திருப்பழமண்ணிப்படிக்கரை யடைந்து போற்றிப் பரவியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 118) குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரது பெருமையைப் பல்லாற்றானும் எடுத்துக்கூறி, அவர் எழுந்தருளியிருக்கும் இடமாகிய தலத்தினைச் சிறப்பித்து அருளிச்செய்தது. பண்: நட்டராகம் பதிக எண்: 22 திருச்சிற்றம்பலம் 219. | முன்னவன் எங்கள்பிரான் முதல் | | காண்பரி தாயபிரான் | | சென்னியில் எங்கள்பிரான் திரு | | நீல மிடற்றெம்பிரான் | | மன்னிய எங்கள்பிரான் மறை | | நான்குங்கல் லால்நிழற்கீழ்ப் | | பன்னிய எங்கள்பிரான் பழ | | மண்ணிப் படிக்கரையே. | | 1 |
1. பொ-ரை: எல்லார்க்கும் முன்னே உள்ளவனும், தனக்கு முன்னுள்ள பொருள் இல்லாதவனும், யாவரினும் தலையாயவனும் அழகிய நீலகண்டத்தை உடையவனும், என்றும் அழியாது நிலைபெற்றிருப்பவனும், நான்கு வேதங்களையும் கல்லால மர நிழலிலிருந்து சொல்லியவனுமாய், எங்கள் தலைவனுமாய் உள்ள இறைவன் எழுந்தருளியிருப்பது, 'திருப்பழமண்ணிப்படிக்கரை' என்னும் தலமே. கு-ரை: "எங்கள் பிரான்" என்பதைப் பெயர்தொறும் வைத்து ஓதினமையின், அதனையும், பொதுத் தன்மை நீக்கிச் சிறப்பிக்கும் பெயராகக் கொள்ளுதல் திருக்குறிப்பாதல் பெறப்படும். "பன்னிய எங்கள் பிரான்" என்றதன்பின், 'இருப்பது' என்னும் சொல் சொல்லெச்சமாய் மறைந்து நின்றது.
|