388. | மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான் | | வல்லேனக் கொம்பணிந்த மாதவனை வானோர் | | தம்மானைத் தலைமகனைத் தண்மதியும் பாம்புந் | | தடுமாறுஞ் சடையானைத் தாழ்வரைக்கை வென்ற | | வெம்மான மதகரியி னுரியானை வேத | | விதியானை வெண்ணீறு சண்ணித்த மேனி | | எம்மானை எறிகெடில வடவீரட் டானத் | | துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே. | | 6 |
ஆகிய இறைவனை, அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்டவந்த சிறிது பொழுதினும் யான், அறியாது இகழ்வேனாயினேன் போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும்! கு-ரை: ''சேந்தர்தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும் உடையான்' என்றது, உமையொடும் கந்தரொடும் கூடிய வடிவைக் குறித்தது. சிறுத்தொண்ட நாயனார்க்கு இறைவன் இவ்வடிவுடன் காட்சியளித்தமை, பெரிய புராணத்துட் கூறப்பட்டமை காண்க. 'பரிவும்' என்பதும் பாடம். 'தாழ் கூந்தல் குயிலன்ன மொழியாள் புனல் மங்கை' என மாற்றுக. ''மங்கை'' என்பதில் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. ''சடையிடையில்'' என்பதன்பின் எஞ்சி நின்ற, 'கொண்ட' என்பது 'வீரட்டானத்துறைவான்' என்பதனோடு முடிந்தது. 8. பொ-ரை: மேகம்போலும், பெருமையையுடைய கண்டத்தையுடைய எம்பெருமானும், வலிய பன்றியின் கொம்பை அணிந்த பெரிய தவக்கோலத்தை யுடையவனும், தேவர்கள் தலைவனும், யாவர்க்குந் தலைவனும், குளிர்ந்த சந்திரனும் பாம்பும் ஒன்றையொன்று அஞ்சி உழல்கின்ற சடையை யுடையவனும், தாழ்வரைக்கண் திரியும் துதிக்கையையுடைய, வெற்றி பொருந்திய, கொடிய, பெரிய, மதங்கொண்ட யானையின் தோலை உடையவனும், வேதத்தில் சொல்லப்பட்ட நெறிமுறைகளாய் உள்ளவனும், வெள்ளிய நீறு பூசப்பட்ட திருமேனியை உடைய எம் தலைவனும், அலையெறிகின்ற கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியுள்ளவனும் ஆகிய இறைவனை, அவன் தனது திருவடியை என்தலைமேல் சூட்டவந்த சிறிது போதினும், யான், அறியாது இகழ்வேனாயினேன்
|