பக்கம் எண் :

755
 
394.இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்

ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்

கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன்

கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்



காலத்தில் இயற்பெயர்க்குப் பின்னரே, 'ஆர்' என்பது சேர்க்கப்பட்டது. (தொல், சொல், 270) எனினும், பிற்கால வழக்கினையும், தொல்காப்பியனார் காலத்து வழக்கென்பது படவே உரைகள் உள்ளன.

'இல்லையே' என்றும் ஏகாரம் தேற்றம்; அது, உள்ளதை 'இல்லை' என்று மறைத்துக் கூறுதல் என்னுங் குறிப்பினை உணர்த்திற்று.

'மாறர்' என்னும் பெயரினராகிய நாயன்மார் மூவர் உளராதலின், அவர்களை, 'இளையான்குடி மாறர், சோமாசி மாறர், நின்றசீர் நெடுமாறர்' எனப் பிரித்தோதி யருளினார். 'இளையான்குடி' என்பது ஊர்ப்பெயர். அதன்கண் உள்ள, 'இளையான்' என்பது, ஒரு தலைவன் பெயராகலின் அதனோடு 'தன்' என்னும் சாரியை புணர்த்தல் பொருந்துவதாயிற்று.

'வெல்லுமாறு மிக வல்லர்' என்றது, பகையரசர் பலரை வென்றமையேயன்றி, 'மெய்த்திருவேடமே மெய்ப்பொருள்' (தி.12 பெரிய புரா. மெய்ப்பொருள். புரா. 15) என்னும் உணர்வில் தோலாது மிக்கு நின்றமையை.

குன்றை, மலைநாட்டில் உள்ள செங்குன்றூர். நாயன்மாரதுகுலம், ஊர், தொண்டு முதலிய சிலவற்றையும் ஒரோவிடத்து, நாயனார் எடுத்தோதியருளினார் என்க.

அல்லி - அகவிதழ். முல்லைமாலை, வணிகர்க்கு உரியது; எனவே, 'அல்லிமென் முல்லையந்தார்' என்றது மரபு குறித்தவாறாம்.

2. கு-ரை: இலை - இலைத் தன்மை; கூர்மை. வேல் - படைக்கலப் பொது; இங்கு, மழுவைக் குறித்தது.

கலை மலிந்த சீர், நூல்களில் பெரிதும் காணப்படுகின்ற புகழ், 'திருவாசகம், கயிலைபாதி காளத்திபாதி, கண்ணப்பதேவர் திருமறம்' முதலாக பல நூல்களினும் கண்ணப்பர் வரலாறு சிறந்தெடுத்துக் கூறப்படுதல் அறிக.