600. | நினைதரு பாவங்கள் நாசங்க ளாக | | நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை | | மனைதரு மலைமகள் கணவனை வானோர் | | மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப் |
கு-ரை: "அயல்" என்றது, அயலாய இடத்தினையும், "அடி" என்றது, அடி உள்ள இடத்தையும் குறித்தன. சேய்மையில் உள்ளாராவார், இறைவனைக் கேள்வியளவால் அறிபவராதலின், துதிக்கவே வல்லராயினர். அவர் அன்னராயினும், நல்லாசிரியர் உணர்த்தியவாறே உணரும் திருவருட்பேறு உடையர் என்க. அடிக்கீழ் உள்ளார் இறைவனைத் தலைப்பட்டுணர்வராகலின், அவர் வணங்குதற்கு உரியவராயினர். "அன்பர்கள்" என்றது, பல திறத்தாலும் அன்பு செய்கின்றவர்களை. 'சாயல்' என்பது, 'மென்மை' எனப்பொருள் படுதல் பண்டை வழக்காயினும் (தொ. சொல். 325), பிற்காலத்தில், 'தோற்றம்' என்னும் பொருளும் தருவதாயிற் றென்க. "தோற்றம்" என்றது வேடத்தை, அன்பர்களது செயல்களாகிய பரவல், தொழுதல் முதலியவற்றுள் ஒன்றும் செய்யாமைபற்றி, 'வேடமாத்திரமே உடையவனாய் இருந்தேன்' என்றார். முயற்சியாவன, தம் முனைப்பால் செய்யப்படும் கருமங்களும், ஆராய்ந்துணரும் ஆராய்ச்சி உணர்வுகளுமாம். ஏனைய பொருள்களை அகப்படுத்தும் அவையே, இறைவனையும் அகப்படுத்தும் என்று துணிந்து கூறலின், அவர் கூற்றினை, 'முயல்வலை யானைபடும்' என மொழிந்ததாக அருளினார். எண்ணுதல், இங்கு துணிந்து கடைப்பிடித்தலை உணர்த்திற்று. சுவாமிகள், பிறர் போல இறைவனைத் தம் முனைப்பாற் செய்யும் வேள்வி முதலியவற்றால் அகப்படுத்த நினைந்தார் அல்லராயினும், சித்தவட மடத்தில் இறைவன் தோன்றி மறைந்தபின், அவனை அறியாது இகழ்ந்த பிழை பற்றி இரங்கிய இரக்க மிகுதி காரணமாக, அவனை மீளக் காண விரைந்த விரைவோடே பல தலங்களிலும் சென்று வணங்கினமையை அவ்வாறு உணர்ந்து, இங்ஙனம் அருளிச்செய்தார் என்க. இதனானே, காமியச் செயற்கேயாக, நிட்காமியச் செயற்கேயாக, இறைவன் வெளி நின்றருளுதல், எவ்வாற்றானும் அவனது கருணை காரணமாகவன்றி, அச்செயல்களது ஆற்றல் காரணமாக அன்றென்பது தெற்றென உணர்ந்துகொள்க. "என்னிடை" என்றதன்பின், 'கிடைத்த' என்பது வருவிக்க. 'பொருள்' என்றது, புதையற் காட்சி, கிழியீடு போல் வனவற்றை. 8. பொ-ரை: நினைத்து உணரப்படும் கருத்துப் பொருள்களாகிய பாவங்கள் அழிதல் உளவாகும்படி, யான், மனத்தால் நினைந்தும்,
|