அணிந்த தனது திருவடியைப் பெறுவித்து, எனது குற்றங்களை எல்லாம் அறுத்த வன்மையையுடைய, தேவர் பலரும் வணங்க நிற்கின்ற பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்! கு-ரை: "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்" என்று அருளினமையாயல் (தி. 7 ப. 62 பா. 8), "நல்லிசை" என்றதற்கு இதுவே பொருளாயினும், அது சிறந்த புகழின் மேலும் நோக்குடைத்தேயாம். அது 'நாவினுக்கரையன்' என்றதனோடும் இயைவதே. 'நாவினுக்கரசரும்' ன்பது பாடம் அன்று. 'நன்மாலை' என இயையும். நன்மை - ஞானம்; அதனை, ஞானத்தை, "சன்மார்க்கம்" (சிவஞானசித்தி சூ. 8) என வழங்குதல் பற்றி அறிக. இவ்வாறு இருவரது பாடலையும் ஒருபெற்றியவாகவே, உணர்த்தி யருளினமையின், அவை தம்மு வேறுபாடின்மை அறிந்துகொள்க. இதனானே, "பாட்டிற்கு நீயும் அவனும்ஒப் பீர்எப் படியினுமே" எனப் பின்வந்தோரும் நாவுக்கரசரை நோக்கிக் கூறினார் என்க (நால்வர் நான்மணிமாலை-2). "சொல்லிய" என மறித்துங் கூறியது. "மாலை" என்னும் ஒப்புமை வழக்கால், 'முன்னர் ஒருவர் சாத்திய வற்றையே கொண்டு, பின்னரும் பலர் சாத்துதல் ஆகாது போலும்' என்று ஐயுறினும் உறுவர் என்னும் திருவுள்ளத்தால். | "உற்ற குறியழியும் ஓதுங்காற் பாடைகளிற் | சற்றும் பொருள்தான் சலியாது" |
- உண்மை விளக்கம்-41 என்றமையின், சொன்மாலைகள் அன்னவல்ல, என்றுந் தூயனவே யாம் என ஐயம் அறுத்தற் பொருட்டு என்க. இவ்வைய மறுத்தற்கண் ஏகாரம், தேற்றமாம், பின்னும் அதுதானே பிரிநிலையுமாய், 'ஏனை எல்லாவற்றினும் மேலாக, இவற்றையே எம் பெருமான் பெரிதும் விரும்புகின்றான்' என்பதுணர்த்தும். இவ்வாறு, அவன் இவற்றைச் சிறப்பாக விரும்புதற்குக் காரணம், இசைமாலை, ஞானமாலை' என்பவற்றாற் குறிக்கப்பட்டது. அஃதாவது, இசையும், ஞானமும் ஒருங்கியைந்த சொன்மாலை யாதல் பற்றியே, இவற்றை இறைவன் ஏனையவற்றினும் மேலாகப் பெரிதும் விரும்புகின்றான் என்றவாறு, வேதங்களுள்ளும் 'சாம வேதத்தை இறைவன் பெரிதும் விரும்புவன்'
|