பக்கம் எண் :

திருவாசகம்
265


தண்ணீரில் பாயும் பொழுது ஏற்படும் ஒலி. நீராடுங்கால் இறைவன் திருவடியைப் புகழ வேண்டும் என்பது, ‘பொய்கைபுக்குக் கையாற் குடைந்து குடைந்து உன் கழல் பாடி’ என்பதனால் அறியக் கிடக்கிறது.

‘உய்யும் வகை’ என்றது, சொர்க்காதி போகங்களையும், சாலோகாதி பத முத்திகளையுமாகும். பிறவி நீங்கி வீடு பெறுதற்கும் இறைவனே அருள வேண்டும் ஆதலின், ‘எய்யாமற் காப்பாய் எமை’ என்றனர். இவ்வாறு கன்னிப்பெண்டிர் நீராடி இறைவனது அருளை வேண்டுகின்றனர்.

இதனால், சொர்க்கம் முதலிய போகங்களினும் வீடு பேறே சிறந்தது என்பது கூறப்பட்டது.

11

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.

பதப்பொருள் : ஆர்த்த - நம்மைப் பிணித்த, பிறவித்துயர் கெட - பிறவித் துன்பம் ஒழியும்படி, நாம் ஆர்த்து ஆடும் - நாம் மகிழ்ந்து ஆடுகின்ற, தீர்த்தன் - தீர்த்தமாய் உள்ளவன், நல் - அழகிய, தில்லைச் சிற்றம்பலத்து - தில்லையின்கண்ணுள்ள ஞான சபையில், தீ ஆடும் - அனலேந்தி ஆடுகின்ற, கூத்தன் - கூத்தப் பெருமான், இவ்வானும் குவலயமும் - பருப்பொருளாய் உள்ள விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும், எல்லோமும் - நம் எல்லோரையும், படைத்தும் - தோற்றுவித்தும், காத்தும் - நிலை பெறுத்தியும், கரந்தும் - நீக்கியும், விளையாடி - விளையாடுபவனாகிய இறைவனது, வார்த்தையும் பேசி - பொருள் சேர் புகழ்களை உரைத்து, வளை சிலம்ப - வளையல்கள் ஒலிக்கவும், வார்கலைகள் - நீண்ட மேகலை முதலிய அணிகள், ஆர்ப்பு அரவம் செய்ய - அசைந்து ஓசை எழுப்பவும், அணி குழல்மேல் - அழகிய கூந்தலின்மேல், வண்டு - மலர்கள் விளங்குகின்ற பொய்கையில், குடைந்து - ஆடி, உடையான் - நம்மை உடைய இறைவனது, பொன்பாதம் - பொன் போன்ற திருவடிகளை, ஏத்தி - துதித்து, இருஞ்சுனை நீர் - பெரிய மலைச்சுனை நீரில், ஆடு - மூழ்குவாயாக.

விளக்கம் : உயிர், இருவினையாகிய கயிற்றால் கட்டப் பட்டுப் பிறவியாகிய கடலுள் செலுத்தப்படலால், பிறவியை