ஒளியையுடையானே, நீராய் உருக்கி - என் மனத்தை நீர் போல உருகப்பண்ணி, என் ஆர் உயிராய் நின்றானே - என் அரிய உயிராய் நின்றவனே, இன்பமும் துன்பமும் - சுகமும் துக்கமும், இல்லானே - இயற்கையில் இல்லாதவனே, உள்ளானே - அன்பர்பொருட்டு அவற்றை உடையவனே, அன்பருக்கு அன்பனே - அன்பர்களிடத்து அன்புள்ளவனே, யாவையும் ஆய் - கலப்பினால் எல்லாப் பொருள்களும் ஆகி, அல்லையும ஆம் - தன்மையினாலே அல்லாதவனும் ஆகின்ற, சோதியனே - பேரொளியையுடையவனே, துன் இருளே - நிறைந்த இருளானவனே, தோன்றாப் பெருமையனே - புறத்தே வெளிப்படாத பெருமை உடையவனே, ஆதியனே - முதல்வனே, அந்தம் நடு ஆகி - முடிவும் நடுவும் ஆகி, அல்லானே - அவையல்லாது இருப்பவனே, என்னை ஈர்த்து ஆட்கொண்ட - என்னை இழுத்து ஆட்கொண்டருளின, எந்தை பெருமானே - எமது தந்தையாகிய சிவபெருமானே, கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் - மிகுந்த உண்மை ஞானத்தால், கொண்டு உணர்வார்தம் கருத்தில் - சிந்தித்து அறிபவர் மனத்தினாலும், நோக்கு அரிய - எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய, நோக்கே - காட்சியே, நுண்உணர்வே - இயற்கையில் நுட்பமாகிய அறிவே, போக்கும் வரவும் நிற்றலும் இல்லாத புண்ணியனே, காக்கும் எம் காவலனே - எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே, காண்பு அரிய பேர் ஒளியே - காண்பதற்கரிய பெரிய ஒளியே, ஆற்று இன்ப வெள்ளமே - மகாநதி போன்ற இன்பப் பெருக்கே, அத்தா - அப்பனே, மிக்காய் - மேலோனே, நின்ற தோற்றச்சுடர் ஒளியாய் - நிலைபெற்ற தோற்றத்தையுடைய விளங்குகின்ற ஒளியாகியும், சொல்லாத நுண் உணர்வு ஆய் - சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகியும், மாற்றம் ஆம் வையகத்தின் - மாறுபடுதலையுடைய உலகத்தில், வெவ்வேறே வந்து - வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு வந்து, அறிவு ஆம் - அறிவாய் விளங்கும், தேற்றனே - தெளிவானவனே, தேற்றத் தெளிவே - தெளிவின் தெளிவே, என் சிந்தனையுள் ஊற்று ஆன - என் மனத்துள் ஊற்றுப் போன்ற, உண் ஆர் அமுதே - பருகுதற்கு அரிய அமிர்தமே, உடையானே - தலைவனே. விளக்கம் : சோதி - பேரொளி, அதிலிருந்து தோன்றுவது சுடர். சோதியை முழுதும் காண்பது அரிது. அதன்கண் உண்டாகும் ஒரு சிறு பகுதியாகிய சுடரைக் காண்பது எளிது. ஆகவே, எளிவந்து அருள் புரிந்த இறைவனைச் "சோதி மலர்ந்த சுடரே" என்றார். இச்சுடர், மலர் போலக் குளிர்ச்சியைத் தருவதால், "மலர்ச்சுடர்" என்றார். பாசம் - அறியாமை. அன்பர்கள் மனத்திலுள்ள வஞ்சனை கெட இறைவன் அதனை விட்டு நீங்காது பெருங்கருணை வெள்ளமாயும் அளவில்லாத
|