பக்கம் எண் :

திருவாசகம்
442


பிரிவு நீங்கி அவனை அடைய வேண்டுமெனில், அதுவும் அவனே அருள வேண்டும் என்பார், 'இது செய்க என்றருளாய்' என்றார்.

இதனால், திருவடிப் பிரிவு பொறுக்க முடியாதது என்பது கூறப்பட்டது.

6

மாய னேமறி கடல்விடம் உண்ட
வான வாமணி கண்டத்தெம் அமுதே
நாயி னேன்உனை நினையவும் மாட்டேன்
நமச்சி வாயஎன் றுன்னடி பணியாப்
பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய்
பிறைகு லாஞ்சடைப் பிஞ்ஞக னேயோ
சேய னாகிநின் றலறுவ தழகோ
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.

பதப்பொருள் : மாயனே - மாயம் செய்பவனே, மறி கடல் - அலைகள் மடங்கி வீழ்கின்ற கடலில் எழுந்த, விடம் உண்ட - நஞ்சை உண்ட, வானவா - தேவனே, மணி கண்டத்து - நீலகண்டத்தையுடைய, எம் அமுதே - எமது அமுதம் போன்றவனே, பிறைகுலாம் - பிறை விளங்குகின்ற, சடை - சடையுடைய, பிஞ்ஞகனே - தலைக் கோலமுடையவனே, திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறையில் பொருந்திய சிவபெருமானே, சேயன் ஆகி நின்று - தூரத்திலுள்ளவனாகி நின்று, அலறுவது அழகோ - நான் கதறுவது முறையாகுமா? ஓ - ஓலம், நாயினேன் - நாய் போன்ற யான், உனை நினையவும் மாட்டேன் - உன்னை மனத்தால் நினைக்கவும் மாட்டேன், நமச்சிவாய என்று - நமசிவாய என்ற திருவைந்தெழுத்தை வாயினாற்கூறி, உன் அடிபணியா - உனது திருவடியை மெய்யினால் வணக்கம் செய்யாத, பேயனாகிலும் - பேய்த்தன்மையுடையேன் ஆகிலும், பெருநெறி காட்டாய் - முத்தி நெறியைக் காட்டியருள்வாயாக.

விளக்கம் : மாயமாவது, தில்லைக்கு வருக என்று கூறியபடி வந்தும் காயத்தைப் போக்கி முத்தியையருளாது காலந்தாழ்த்தல். மனத்தினால் நினைத்து, வாயினால் பாடி, காயத்தினால் வணங்கி, பெருநெறியாகிய முத்தியையடைய வேண்டும்; அவ்வாறு செய்யாமையால் தம்மை, 'பேயன்' என்று இழித்துக் கூறிக்கொண்டார்.

இதனால், திருவைந்தெழுத்து இறைவனை அடைதற்குரிய சாதனம் என்பது கூறப்பட்டது.

7

போது சேரயன் பொருகடற் கிடந்தோன்
புரந்த ராதிகள் நிற்கமற் றென்னைக்
கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக்
குறிக்கொள் கென்றுசின் தொண்டரிற் கூட்டாய்