பக்கம் எண் :

திருவாசகம்
491


கங்கையாறும், தங்கு - தங்கிய, செஞ்சடையாய் - சிவந்த சடையையுடையவனே, தெருளும் - தெளிவையுண்டுபண்ணும், நான்மறை சேர் - நான்கு வேதங்கள் ஒலிக்கின்ற, திருப்பெருந்துறையில் - திருப்பெருந்துறையின்கண், செழுமலர் - செழுமையான மலர்களையுடைய, குருந்தம் மேவிய - குருந்த மர நிழலைப் பொருந்திய, சீர் அருளனே - சிறந்த அருளுடையவனே, அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேனாகிய யான் அன்போடு அழைத்தால், அதெந்துவோ என்று அருளாய் - அஞ்சாதே என்று அருள்வாயாக.

விளக்கம் : மருள் என்பது இதுவோ அதுவோ எனத் தெளிவில்லாது மயங்குவது. நோக்கம் என்பது நயனதீட்சை. ‘மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி’ என்றதால், இறைவனது திருநோக்கம் மயக்கத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுக்க வல்லது என்பது புலனாம். ‘அரவம் கங்கை ஆகியவற்றின் ஆற்றலைக் கெடுத்து முடிமேல் அணிந்தது போன்று, அடியேனது மயக்கத்தைப் போக்குவதுடன் வீடு பேறு அருள வேண்டும்’ என்ற குறிப்பும், ‘பொங்கு வாளரவம் கங்கை நீர் தங்கு செஞ்சடையாய்’ என்றதால் விளங்குகிறது.

சிவபெருமான் அரவம் அணிந்தது : தாருக வனத்து முனிவர் கொண்ட செருக்கினை அடக்கும்பொருட்டுச் சிவபெருமான் பிட்சாடன மூர்த்தியாய்ச் சென்று அம்முனிபத்தினியரை மயக்கும்படி செய்தான். இதனைக் கண்டு மனம் பொறாத அம்முனிவர்கள் சிவபெருமானை அழிக்கும்பொருட்டு வேள்வி இயற்றி, அவ்வேள்வியில் தோன்றிய அரவத்தினைப் பெருமான்மேல் ஏவினர். அதனை இறைவன் மாலை போல ஏற்று முடிமேல் கொண்டான் என்பதாம்.

இதனால், இறைவன் மயக்கத்தைப் போக்கி ஞானத்தையருள வல்லவன் என்பது கூறப்பட்டது.

9

திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்
டென்னுடை எம்பிரான் என்றென்
றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
போதராய் என்றரு ளாயே.

பதப்பொருள் : அருந்தவா - அரிய தவக்கோலத்தை உடையவனே, திருந்து - திருந்திய, வார் - நீண்ட, பொழில் சூழ் - சோலை சூழ்ந்த, திருப்பெருந்துறையில் - திருப்பெருந்துறையின்கண், செழுமலர் - செழுமையான மலர்களையுடைய, குருந்தம் மேவிய -