பக்கம் எண் :

திருவாசகம்
503


திருத்தொண்டிலே இருக்க அருளினமையை, 'உறவினொடும் ஒழிய' என்று கூறினார். பிறவியை நீக்கிப் பிறப்பினால் உண்டாகும் துன்பங்களையும் போக்கியருளினான் என்பதாம்.

இதனால், இறைவனே முதற்பொருளானவன் என்பது கூறப்பப்டடது.

6

பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப்
பித்தனிவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே.

பதப்பொருள் : பத்திமையும் பரிசும் இலா - அன்புடைமையும் நல்லொழுக்கமும் இல்லாமைக்கு ஏதுவாகிய, பசுபாசம் அறுத்தருளி - ஆன்ம அறிவைத் தடை செய்கின்ற பாசத்தை நீக்கி, என்னை - அடியேனை, இவன் பித்தன் என ஆக்குவித்து - 'இவன் பித்துப் பிடித்தவன்' என்ற கண்டோர் கூறும்படி செய்து, திருப்பாதம் பேராமே - நான் தமது திருவடியை விட்டு விலகாமல், சித்தம் எனும் - மனம் என்கிற, திண்கயிற்றால் - வலிய கயிற்றினால், கட்டுவித்த - கட்டுண்டு கிடக்கும்படி செய்த, வித்தகனார் - ஞான வடிவினராகிய சிவபிரானாரது, விளையாடல் - திருவிளையாடலை, விளங்கு தில்லை கண்டேன் - விளங்குகின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்.

விளக்கம் : 'பித்து' என்பது ஞானம். இஃது உலகத்தார்க்குப் பித்துப் போலத் தோன்றுவதால், 'பித்து' என்று சொல்லப்படும். சித்தமெனும் திண்கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்தலாவது, சித்தத்தைத் திருவடியின்பாலே நிலைபெறுத்தி வேறொன்றை நினையாதிருக்கச் செய்தல். 'உலகச் சூழலிலே உழல்கின்ற என்னை இறைவன் தன் திருவடியிலே நிலைத்திருக்கச் செய்தான்' என்பதாம்.

இதனால், இறைவனது விளையாட்டின் திறமை கூறப்பட்டது.

7

அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி
விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்
களவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக்
களவிலா வானவருந் தொழுந்தில்லை கண்டேனே.

பதப்பொருள் : அளவு இலாப் பாவகத்தால் - அளவற்ற எண்ணங்களால், அமுக்குண்டு - அழுத்தப்பட்டு, இங்கு - இவ்வுலகத்தில், அறிவு இன்றி - அறிவில்லாமல், விளைவு ஒன்றும் அறியாதே - இனிமேல் நிகழப்போவதைச் சிறிதும் அறியாமல், வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு - பயனற்றவனாயிருக்கின்ற எனக்கு, அளவு இலா ஆனந்தம் அளித்து - அளவற்ற இன்பத்தைக் கொடுத்து, என்னை ஆண்டானை - என்னை ஆண்டருளினவனை, களவு இலா வானவரும் தொழும் - வஞ்சகமில்லாத் தேவரும்