பக்கம் எண் :

திருவாசகம்
531


இதனால், சிவபெருமானுக்கு அடியவராயினார் பிற தெய்வங்களை வணங்குதல் பொருந்துவது அன்று என்பது கூறப்பட்டது.

1

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பி ரானாந்
திருவுரு அன்றி மற்றோர் தேவர்எத் தேவர் என்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

பதப்பொருள் : வேட்கை வந்தால் வெருவரேன் - ஆசை மிகுந்து வந்தாலும் அஞ்ச மாட்டேன், வினைக்கடல் கொளினும் அஞ்சேன் - வினையாகிற கடல் என்னைச் சூழ்ந்துகொண்டாலும் அஞ்சமாட்டேன், இருவரால் மாறு காணா - பிரம விட்டுணுகளாகிய இருவராலும் மாறுபட்டுக் காண முடியாத, எம்பிரான் - எம் தலைவனாகிய, தம்பிரான் ஆம் - இறைவனது, திருவுரு அன்றி - திருவடிவத்தையே கண்டு களிப்பதன்றி, மற்றோர் தேவர் - மற்றைய தேவர்களை, எத்தேவர் என்ன - என்ன தேவரென்று, அருவராதவரைக் கண்டால் - அருவருப்பும் கொள்ளாதவரைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

விளக்கம் : பறறற்றான் பற்றினைப் பற்றும் அடியார்க்கு உலகப் பற்று அறும் ஆதலின், 'வேட்கை வந்தால் வெருவரேன்' என்றார். அவர்களுக்கு வினையாகிய கடலைக் கடத்தற்கு இறைவனாகிய தோணி உதவுமாதலின், 'வினைக்கடல் கொளினும் அஞ்சேன்' என்றார். அவ்வாறு உதவுகின்றவனாகிய சிவபெருமானைத் தவிர மற்றொரு தேவரைக் கண்டால் வெறுப்பு அடையாதவரைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்பார், 'தம்பிரானாந் திருவுரு அன்றி மற்றோர் தேவர் எத்தேவர் என்ன அருவரா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறு' என்றார்.

இதனால், சிவபெருமானையன்றி மற்றத் தேவரை வணங்குவதால் பிறவித்துன்பம் நீங்காது என்பது கூறப்பட்டது.

2

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

பதப்பொருள் : வன்புலால் வேலும் அஞ்சேன் - வலிமையான மாமிசம் பொருந்திய வேற்படைக்கும் அஞ்ச மாட்டேன்; வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் - வளையலை அணிந்த பெண்களுடைய கடைக்கண் பார்வைக்கும் அஞ்ச மாட்டேன், என்பு எலாம் உருக நோக்கி - எலும்புகளெல்லாம் உருகும்படியாகப் பார்த்து, அம்பலத்து ஆடுகின்ற - பொன்னம்பலத்தில் நடிக்கின்ற,