பக்கம் எண் :



4. கோயில்-‘‘இணங்கிலா ஈசன்’’

பண்-காந்தாரம்

திருச்சிற்றம்பலம்
 

35.

இணங்கிலா ஈசன் நேசத்
   திருந்தசித் தத்தி னேற்கு
மணங்கொள்சீர்த் தில்லை வாணன்
   மணவடி யார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறில்
   கோறைவாய்ப் பீறற் பிண்டப்
பிணங்களைக் காணா கண்: வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                     (1)
 

36.

எட்டுரு விரவி என்னை
   ஆண்டவன், ஈண்டு சோதி
விட்டிலங் கலங்கல் தில்லை
   வேந்தனைச் சேர்ந்தி லாத
 

இத்திருப்பதிகம்,     தில்லைப்     பெருமானிடத்தும்,    அவன்
அடியாரிடத்தும் அன்பு செய்யமாட்டாதவரது  இழிபுணர்த்தி, அவரைக்
காணுதலும், அவரொடு பேசுதலும் ஆகாமையை உணர்த்தியருள்கின்றது.

35.  இணங்கு-ஒப்பு. ‘சித்தத்தினேற்குக் கண் காணா; வாய் பேசாது’
என இயையும். எனவே, இஃது ஏனைத்  திருப்பாட்டுக்களினும் சென்று
இயைவதாதல் அறிக. மணங்கொள்-பல விழாக்களைக்கொண்ட ‘தில்லை
வாணனது   மணத்தை   (கூட்டத்தை)ப்   பெற்ற   அடியார்’  என்க.
வண்மை-வளப்பம்;   சிறப்பு.  வீறுஇல்-பெருமை  இல்லாத,  ‘கோரம்’
என்பதில்,   ரகரம்   றகரமாயும்,   அகரமாயும்    திரிந்து  நின்றன.
கோரம்-கொடுமை.   பீறல்  பிண்ட-ஓட்டை   உடம்பையுடைய. உயிர்
வாழ்தலால்  பயன்  இன்மையின்,  ‘‘பிணங்கள்’’  என இகழ்கின்றவர்,
அக்காரணத்தானே     உடம்பின்      இயல்பை   விதந்தோதினார்.
பிதற்றுதலுடைமை பற்றி, ‘பேய்கள்’ என்றார்.

36.    ஈண்டு சோதி-மிக்க ஒளி;  இஃது ‘‘இலங்கு’’ என்பதனோடு
முடியும்.    அலங்கல்-மாலை;    என்றது    பொன்னரி  மாலையை;
இதனையுடையது தில்லை. தூர்த்த வார்த்தை-