இத்திருப்பதிகம், இறைவரைக் காதலித்தாள் ஒருத்தியது கூற்றாய் அமைந்தது. 101. தளிர் ஒளி-தளிர்போன்ற ஒளியையுடைய. மணிப்பூம் பதம்-அழகிய மலர்போலும் திருவடியில். அலம்ப-ஒலிக்க. தெளிர் ஒளி மணி நீர்த்திவலை-தெளிவான ஒளியை யுடைய அழகிய நீர்த் துளிகள். முத்து அரும்பி-முத்துப்போலத் தோன்ற. அரும்ப என்பது ‘‘அரும்பி’’ எனத் திரிந்தது. சொட்டு அட்ட-துளிகளைச் சிந்த, துளி, வியர்வைத் துளி. ‘சொட்டட்ட ஆடும் ’ என இயையும். பழனம்-வயல், ‘பொழிலும் பழனமும் கம்பலை செய்யும் கீழ்க்கோட்டூர்’ என்க. கெழுவு-பொருந்திய. கம்பலை-ஆரவாரம். ‘கம்பலம்’ என்பது பாடம் அன்று. பொழிலிலும், பழனத்திலும் உள்ளவை செய்கின்ற ஆரவாரத்தை அவையே செய்வனவாக்க கூறினார். மணிஅம்பலம்-மாணிக்கச் சபை. மைந்தன்-வலிமை (தளராமை) உடையவன் ஈற்றில், ‘இஃதென்ன வியப்பு’ என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. 102. மொழுப்பு - முடி. ‘சூழியம்’ என்பது குறுகி. ‘‘சுழியம்’’ என வந்தது. சூழியம்-உச்சிக் கொண்டை, இஃது, |