பக்கம் எண் :

திருமுறை]10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்71


107. 
 

தழைதவழ் மொழுப்பும் தவளநீற் றொளியும்
   சங்கமும் சகடையின் முழக்கும்
குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும்
   குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழைதவழ் கனகம் பொழியுநீர்ப் பழனங்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மழைதவழ் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தர்தம் வாழ்வுபோன் றதுவே.              (7)
 

108.
 

தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை
   தமருகம் திருவடி திருநீ
றின்னகை மாலை கங்கைகொங் கிதழி
   இளம்பிறை குழைவளர் இளமான
 

ஓகாரம்     அசையெனினும்ஆம். ‘அஞ்சலோம்பு’   என்பதே பாடம்
போலும்.    ஆழி-கடல்.    திரை-அலை.    அலமருதல்-அலைதல்.
அலமருவது  திரையன்றி ஆழியன்றாயினும், அஃது அதனைத் தாங்கி
உடன்  நிற்றல்பற்றி அதனையும் அலமருவதாகக் கூறினாள். தனக்குத்
துயர்     செய்பவை     தாமம்     துயர்ப்படுவதைக்      கண்டு
மகிழ்கின்றாளாதலின்,  ‘அலமருமாறு கண்டு’ என்றாள், இதனால், கண்
துயிலாமை  விளங்கிற்று.  அவை துயர்ப்படினும் தன் துயர் நீங்காமை
பற்றி,  ‘அயர்வன்’ என்றாள், கிஞ்சுகம்-முள்முருக்கம் பூ. மஞ்சு அணி
அம்பலம்-மேகங்களை   மேலே   கொண்ட  மேற்கட்டியை  யுடைய
அம்பலம். ஓகாரம், முறையீடு குறித்தது.

107. தழை-வில்வம், வன்னி முதலியவற்றின் இலை. மொழுப்பு-முடி.
சங்கம்-சங்க  வளையல் ; இஃது அம்மைபாகத்தில் உள்ளது. ‘‘சகடை’’
என்றது,  உடுக்கையை,  தெண்டு-திரட்சி, குண்டை-எருது, ‘தழைதவழ்
மொழுப்பு  முதலாகக் குண்டையீறாக  உள்ளனவே  அவரது  வாழ்வு
போன்றன’  என்க.  குழாங்கொடு  தோன்றும்  ‘கனகம்’ என்க. ‘மிக்க
பொன்’  என்றவாறு.  கிழை-ஒளி. ‘கனகத்தைச் சொரியும் நீரையுடைய
பழனங்கள்  கம்பலை செய்கின்ற கீழ்க்கோட்டூர்’ என்க.  மழை-மேகம்,
‘‘போன்றன’’   என்றதில்  போறல்’  ஆக்கப்  பொருட்டாய்  நின்றது.
‘அவரை   என்மனம்   காதலிக்கின்றது   வியப்பாகின்றது’   என்பது
குறிப்பெச்சம்.

108. ‘தன்னகத்துள்ள  சிலம்பு முதலாக மான் ஈறாயினவற்றை என்
மனத்து வைத்தான்’ என்க. அகம், ஏழன்