இத்திருப்பதிகத்தில் ஆசிரியர் இறைவன் தமக்கு அருள் செய்தவகையைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். 112. புவனம்-உலகம் ; இவ்வஃறிணை இயற்பெயர் பன்மைப் பொருட்டாய், ‘எல்லா உலகங்கட்கும், எனப் பொருள் தந்தது. இவ்வாறு வருவதனை, ‘சாதியொருமை’ என்ப. அகம்-இடம்; அக உயிர் -உன்னை அடைந்த உயிர்கள்; முத்தான்மாக்கள், ‘அவனிக்கு’ என உருபு விரித்து, உலகிற்கு இருளை நீக்கி ஒளியைத் தரும் ஞாயிறுபோன்று மருளை நீக்கி அருளை வழங்கி, என உரைக்க. பசுபதி-உயிர்கட்குத் தலைவன். பன்னக ஆபரணன்- பாம்பாகிய அணிகளை யுடையவன ; தனியனேன் - துணை இல்லாதேன். தனிமை நீங்குதற்கு- அந்நிலை நீங்குமாறு ; என்றது, யான் துணை பெற்று உய்யும்படி’ என்றவாறு. 113, புழுங்குதல்-வேதல் ‘‘புழுங்கு’’ என்றது, ‘‘வினையேன்’’ என்பதன் இறுதிநிலையோடு முடியும். ‘‘புழுங்கு தீவினையேள்’’ என்றது, ‘தீவினையால் புழுங்குவேன்’ என்றவாறாம். புகுந்து-எதிர் வந்து. புணர் பொருள் உணர்வு |