இத்திருப்பதிகம், தில்லைப் பெருமானைக் காணும் வேட்கை மிகுதியை எடுத்தோதி யருளியது. 195. மின்னார்-பெண்கள். மேல்-மாடங்களின் மேல் நிலையில், ‘‘விளங்க’’ என்பது, ‘‘சூழ’’ என்பதனோடு முடிய, ‘‘சூழ’’ என்பது, ‘‘நின்ற’’ என்பதனோடு முடியும். பொன்னார் குன்றம், பொன்னம்பலத்திற்கு உவமை. ‘‘என்னா’’ என்பதற்கு, ‘மருளும்’ என்று ஒருசொல் வருவித்து முடித்து, ‘அதனை’ மருளும் அம்பலம்’ என இயைத்து முடிக்க, ‘‘தென்னா’’ என்பது ஒலிக்குறிப்பு. 196. ஓவா-ஒழியாத, முத் தீ, ‘ஆகவனீயம், காருக பத்தியம், தக்கிணாக்கினி’ என்பன. அஞ்சு வேள்வி, ‘பிரமயாகம், தேவயாகம், பிதிர்யாகம், மானுடயாகம், பூதயாகம் என்பன. ஆறங்கம், ‘சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம்’ என்பன. இவை வேதத்தின் |