‘இது தில்லைப் பெருமானைக் காதலித்தாள் ஒருத்தியது கூற்றாக அருளிச்செய்தது’ என்பதை ஆசிரியரே திருக்கடைக்காப்பில் வெளிப்படுத்தியுள்ளார். இதன்கண் உள்ள பாடல்கள் அறுசீரடியாலாயவையெனினும், முதற்பாட்டின் இரண்டடிகளில் எழுசீர்கள் வந்தன. இது முழுதும் அந்தாதியாய் அமைந்தது. 226. படர்தல்-மூடுதல், ‘வரையில்’ எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். பவளமலை சிவபெருமானுக்கும், அதனை மூடிய பனி அப்பெருமான் பூசியுள்ள திருநீற்றுக்கும் உவமை. கண்ணி-முடியில் அணியும் மாலை. ‘‘கொன்றை’’ என்றதும் அதனாலாகிய கண்ணியையே. துன்று-பொருந்திய. பொன்-பொன்போலும், குழல்-சுருண்ட, திவள-விளங்க, ‘திருநீறும், சடையும் திவள நடம்புரிகின்ற’ என்க. தவளவண்ணன்-வெண்மை நிறத்தை உடையவன். 227. ஒக்க ஓட்டந்த-ஒருசேர ஓடிவந்த. அந்தி-மாலைக் காலம். ‘மாலைக் காலமும், சந்திரனும் ஒருசேர ஓடிவந்தன’ என்றான். பின்பு, ‘அவை இரண்டும் கடல் ஒலியோடு சேர்ந்து |