பக்கம் எண் :

திருமுறை]24. கோயில்161


வாமத் தொழிலார் எடுத்த பாதம்
   மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித்
   தேவன் ஆடுமே.                            (5)
 

241.

குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை
   குவிந்த கரைகள்மேல்
திரைவந் துலவும் தில்லை மல்கு
   சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண் டபத்து
   மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம்ஆட அனல்கை யேந்தி
   அழகன் ஆடுமே.                            (6)
 

242.

சித்தர் தேவர் இயக்கர் முனிவர்
   தேனார் பொழில்தில்லை
அத்தா அருளாய் அணிஅம் பலவா
   என்றென் றவர்ஏத்த
முத்தும் மணியும் நிரந்த தலத்துள்
   முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழ நட்டம்
   குழகன் ஆடுமே.                            (7)
 


கொள்க.       இறைவன்,      வலத்     திருவடியை    ஊன்றியும்,
இடத்திருவடியைத்  தூக்கியும்  நடனம்  செய்தல் அறிக.   ‘ பாதத்தின்
கண்’  என  உருபு  விரிக்க.  மழலை-இனிய  ஓசையை   உடைய.  தீ
மெய்-நெருப்புப்போலும் நிறத்தை யுடைய.

241. கைதை-தாழை.   குவிந்த-திரண்டுள்ள.  கரை-கடற்கரை.அதன்
இடப்பகுதிகள்    பற்றி,    ‘கரைகள்’     எனப்பலவாகக்   கூறினார்.
திரை-அலை.  ‘தில்லைச்  சிற்றம்பலம்’   என  இயையும், சிற்றம்பலம்,
இங்குக்  கோயிலைக்  குறித்தது.  மல்கு-அழகு  நிறைந்த. வரை-மலை.
மலிந்த  மணி-நிறைந்த இரத்தினங்களால்  ஆகிய, ‘மண்டபத்து ஆடும்’
என இயையும்.

242. ‘‘அவர்’’  என்பதனை,  ‘‘முனிவர்’’ என்றதன்பின்னும், ‘‘அணி
அம்பலவா’’  என்பதை, ‘‘அத்தா’’  என்றதன்பின்னும் கூட்டுக. ‘‘நிரந்த
தலம்’  என்பது  முன்னும்   வந்தது  (2), ‘முளை மதி’ என இயைத்து.
‘புதுவதாய்த் தோன்றும்