பக்கம் எண் :

174புருடோத்தம நம்பி திருவிசைப்பா[ஒன்பதாந்


263.

ஆருயிர் காவல்இங் கருமை யாலே
   அந்தணர் மதலைநின் னடிபணியக்
கூர்நுனை வேற்படைக் கூற்றஞ்சாயக்
   குரைகழல் பணிகொள மலைந்ததென்றால்
ஆரினி அமரர்கள் குறைவி லாதார்
   அவரவர் படுதுயர் களைய நின்ற
சீருயி ரேஎங்கள் தில்லை வாணா
   சேயிழை யார்க்கினி வாழ்வரிதே,               (7)
 

264.

சேயிழை யார்க்கினி வாழ்வரிது
   திருச்சிற்றம் பலத்தெங்கள் செல்வ னேநீ
தாயினும் மிகநல்லை யென்ற டைந்தேன்
   தனிமையை நினைகிலை சங்க ராஉன்
பாயிரும் புலியத ளின்னு டையும்
   பையமே லெடுத்தபொற் பாத முங்கண்
டேயிவள் இழந்தது சங்கம் ஆவா
   எங்களை ஆளுடை ஈசனேயோ!                (8)
 


263,    இங்கு ஆருயிர் காவல் அருமையால் - இவ்வுலகில் தனது
அரிய   உயிரைக்   காத்துக்கொள்ளுதல்  இயலாமையால்.  அந்தணர்
மதலை,  மார்க்கண்டேயர்.  ‘சாய  மலைந்தது’  என இயையும்.  குரை
கழல்   -   ஒலிக்கின்ற  கால்  அணிந்த  பாதம்.  பணிகொள-செயல்
கொள்ளும்படி.  மலைந்தது,  தொழிற்  பெயர். ‘மலைந்தது  குரைகழல்
பணிகொள  என்றால்’ என மாற்றுக. ‘கூற்றுவனைச் சாய்த்தது  திருவடி
ஒன்றினாலே  என்றால்’  என, இறைவனது பெருமையை  வியந்தவாறு.
‘‘குறைவு’  என்றது,  அடங்குதல்’  என்னும்  பொருட்டாய்,  ’’குறைவு
இலாதார்’’  என்றது, ‘உனக்கு அடங்குதல் இல்லாதவர்’ எனப் பொருள்
தந்தது.   சீர்  உயிரே-  சிறந்த  உயிர்போல்பவனே.   ‘ஏனைத்தேவர்
ஒருவர்க்கும்   இல்லாத   உனது  இப்பெருமையை   உணருந்தோறும்
சேயிழையார்க்கு இனி வாழ்வு அரிது என இயைபு படுத்து உரைக்க.

264,    ‘தாயினும் மிக நல்லையாகிய நீ இவளது தனிமைத் துயரை
நினைகின்றாய்  இல்லை’ என்றபடி. ‘‘பால்நினைந் தூட்டும் தாயினும்
சாலப்   பரிந்து’’
 என்னும்  திருவாசகத்தை  நோக்குக   பிடித்த-9).
‘‘சங்கரா’’  என்றதும்,  நீ சுகத்தைச் செய்பவன் அல்லையோ  என்னும்
குறிப்புடையது ‘உன்உடை’ என