தருமை ஆதீனம் இயற்றிவரும் பணிகள்

எண்
1.தேவாரப் பாடசாலை நிறுவித் தெய்வத் தமிழ் வளர்ப்பது.
2.சிவாகமப் பாடசாலை வைத்துத் திருக்கோயில் பூஜை முறைகளைப் பயிற்றுவிப்பது.
3.தமிழ்க் கல்லூரி நிறுவி, வித்துவான் தேர்விற்கு அனுப்புவது.
4.வடமொழிக் கல்லூரி நிறுவி, சிரோமணித் தேர்விற்கு அனுப்புவது.
5.ஸ்ரீ குருஞானசம்பந்தர் தொடக்கப்பள்ளி அமைத்து அறிவுப் பண. செய்தல்.
6.அரசாங்கத்தாரின் கல்வித் திட்டத்தின்படி உயர்நிலைப் பள்ளி வைத்து அறிவுப்பணி செய்தல்.
7.சித்தாந்தக் கல்லூரி அமைத்துச் சைவ சித்தாந்தத்தைப் பரப்புதல்.
8.கோடை வகுப்பு நடத்திப் பலர்க்குப் பல்வேறு சமயங்களில் பொதுஞானம் பெறுவித்தல்.
9.ஆதீனக் கோயில்தோறும் பண்ணிசைத் தமிழ் வளர்ப்பது.
10.சிவஞான நூல்களைத் தெளிவுற அச்சிட்டு வழங்குவது.