மருந்தும் மருத்துவனையும் அமைப்பித்தலையும் ஒக்கும். உள்ளங்கொள்ளுதலை அறிந்தெனவும், அமைப்பித்தலை அறிவித்தெனவும் ஓதினர். பின்பு அவ்வுயிர்களுடன் விரவி அவ்வுயிர்களின் அன்பு அறிவு ஆற்றல்களைத் தனித்தனி விளக்கியருளத்திருவுள்ளங் கொண்டநிலை பேராற்றற் பெருந்திரு என்று பேசப்பெறும். இதனையே ஆதிசத்தி என்ப. திருவள்ளுவ நாயனார் ஓதியருளிய முதல் திருக்குறளில் பேசப்பெறும் ஆதியென்பதும் இதுவே. அவ்வாதி தனித்தனி ஆருயிர்களின் அறிவை இயைந்தியக்கி விளக்குங்கால் ஞானம் எனவும், அன்பை விளக்குங்கால் இச்சை எனவும், ஆற்றலை விளக்குங்கால் கிரியை எனவும் பேசப்பெறும். இம்முறையில் திருவருள் ஒன்றனையே பேரறிவுப் பெருந்திரு, பேராற்றற் பெருந்திரு, அறிவுப் பெருந்திரு, அன்புப்பெருந்திரு, ஆற்றற் பெருந்திரு என ஐவகையாக ஓதுகின்றோம். பேரறிவு பேராற்றல் அன்பறிவாற்றல்லுடனாச், சேரப் பெருந்திருவைந் தோது என்பதனை நினைவுகூர்க. இவற்றைமுறையே பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி எனக் கிளத்துவர். ஆருயிர்களின் அன்பறிவாற்றல்களை விளக்கும் நிலை தனித்தனி நிலையாதலின் இந்நிலை தடை செய்ஞானம் எனப்பட்டது. அது கதிரொளி யாண்டும் ஒரு பெற்றித்தாய் விளக்கிச் செல்லுதலையும் பொருள்களின் மேற்சாய் வாய்ப்பட்டு நிழலாய் தடையுண்டு செல்லுவதனையும் ஒக்கும். தடையுண்ணும் நிலை மருத்துவன் 'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்' (948) என்னும் செந்தமிழ்ப் பொதுமறையில் ஓதியாங்குத் தனித்தனித் துணைபுரியும் நிலையாகும். இதன்கண் ஓதப்பெறும் நாடுதல் மூன்றும் முறையே அன்பால் அறிவால் ஆற்றலால் கொள்ளும் ஆய்வாகவும், வாய்ப்பச் செயல் பேராற்றற் பெருந்திருவின் திருவுள்ளப் புரிவாகவும் ஒரு புடையாகக் கொள்க. (அ. சி.) சத்தன் - சிவன். (10) 321. தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப் பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போகியே1 மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச் சித்திய தாக்குஞ் சிவானந்தத் தேறலே. (ப. இ.) மாயாகாரிய மெய்யாகிய தத்துவம் முப்பத்தாறும், இம் மெய்யின் காரியமாகிய மெய்யாக்கம் என்று சொல்லப்படும் தாத்துவிகம் அறுபதும் ஆகிய தொண்ணூற்றாறு மெய்களின் தொடர்புண்மையினைத் திருவருளால் கண்டுணர்தல் தத்துவ நீக்கம் எனப்படும். அஃதாவது அத் தத்துவக் கூட்டம் ஆண்டவனால் தரப்பட்ட அவனது உடைமைப் பொருள். அவை ஆருயிர்கட்கு இரவல் பொருள். ஆனால் உயிர்கள் இவ்வுண்மையினை மறந்து தங்கட்கே உரிய உடைமைப் பொருள்கள் என்று பிழைபட எண்ணுகின்றன. அப் பிழையினைப் போக்கி விழைதக்க உண்மையினை நோக்கி ஒழுகுவதே தத்துவ நீக்கம் இவ்வுண்மை நாயனாரருளிய 'சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின், வகை தெரிவான் கட்டே உலகு' (27) என்னும் செந்தமிழ்ப் பொதுமறை
1. அங்கத்தை அப்பர், 4. 75 - 8. " தன்னையா. 12 . தடுத்தாட் - 182.
|